For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியர்களை வேலைக்கு எடுக்க குவைத் அரசு தடையா?: இந்திய தூதர் விளக்கம்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: இந்தியர்களை வேலைக்கு எடுக்க குவைத் அரசு தடை விதிக்கவில்லை என்று குவைத்துக்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் தெரிவித்துள்ளார்.

‘No Visa Ban On India Labour’

இந்திய பெண்களை வீட்டுக்கு வேலைக்கு எடுக்கும் குவைத் ஆட்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் வங்கி கேரண்டியாக ரூ.1.56 லட்சம் செலுத்த வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவித்துள்ளது. மோடி அரசின் இந்த முடிவை எதிர்த்து இந்தியர்களை வேலைக்கு எடுக்க குவைத் அரசு தடை விதித்துள்ளது என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து குவைத்துக்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் கூறுகையில்,

இந்தியர்களை வேலைக்கு எடுக்க குவைத் அரசு தடை விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அந்த செய்தியில் உண்மை இல்லை. குவைத்துக்கும் நமக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்த விவகாரம் பற்றி குவைத் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

English summary
Sunil Jain, Indian ambassador to Kuwait asked the people not to believe the news that Kuwait has stopped employing Indians in protest against Indian government's decision requiring the employers of Indian women domestic workers to pay a bank guarantee of Rs. 1.5 lakh with the Indian embassy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X