Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"யாரும் சாகல தானே.." சொகுசு காரை அப்பாவி மக்கள் மீது ஏற்றிய இளைஞர்.. அடுத்து சொன்ன அதிர்ச்சி பதில்

Subscribe to Oneindia Tamil

நொய்டா: சொகுசு காரை ஓட்டி வந்த இளைஞர் சாலையில் நின்று கொண்டு இருந்த கட்டுமான தொழிலாளர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அருகே இருந்த நபர்கள் அந்த இளைஞரை வீடியோ பதிவு செய்ய முயன்றபோது, "யாரும் சாகல தானே" என்று அந்த நபர் கேட்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நமது நாட்டில் சாலை விபத்துகள் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. சாலை விதிகள் கடுமையாக இருந்தாலும் அதைச் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதே விபத்திற்குக் காரணமாக இருக்கிறது. இதனால் பல நேரங்களில் மோசமான விபத்துகள் நடந்து வருகிறது. அதுபோல ஒரு ஷாக் விபத்து தான் இப்போது நடந்துள்ளது.

Noida accident

சொகுசு கார் விபத்து

அதாவது நேற்று மாலை நொய்டாவின் செக்டார் 94 சாலையில் வந்த ஒரு சிவப்பு நிற லம்போர்கினி கார் அங்கு விபத்தை ஏற்படுத்தியது. அங்குப் புதிதாக வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், அதில் வேலை செய்து வந்தோர் அங்கு நடைபாதையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீது தான் இந்த லம்போர்கினி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. அதாவது விபத்தை ஏற்படுத்திய லம்போர்கினி காரை நோக்கி அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஓடிச் செல்கிறார்கள். கார் கதவைத் திறந்து உள்ளே யார் இருக்கிறார் என்பதைப் படம் பிடித்துள்ளனர்.

யாரும் சாகவில்லை தானே

வீடியோ எடுத்த ஒருவர், "எதுக்கு இந்த ரோட்டில் ஸ்டண்ட் செய்து கொண்டு இருக்க.. இங்கே எத்தனை பேர் விபத்தில் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்கிறார். அதற்கு வண்டியை ஓட்டி வந்த அந்த இளைஞர் அலட்சியமாக "இப்போ யாரும் சாகவில்லை தானே?" என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதில் விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டதாகவும் இருப்பினும் அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அலட்சியம்

லம்போர்கினியில் இருந்து இறங்கிய அந்த நபர் என்ன ஆச்சு என்பதைப் பார்க்கச் செல்கிறார். அப்போது வீடியோவைப் பதிவுசெய்த நபர், "காவலர்களை கூப்பிடுங்கள்.. தாறுமாறாகக் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்" என்று கத்துகிறார். அதற்கு அந்த இளைஞர், "நான் மெதுவாகவே ஆக்சிலரேட்டரை அழுத்தினேன்" என்று எந்தவொரு பதற்றமும் இல்லாமல் கூறுகிறார். அதற்கு வீடியோ பதிவு செய்யும் நபர், "மெதுவாக அழுத்தினால் இப்படி நடக்குமா?" என கேட்கிறார். அத்தோடு அந்த வீடியோ நிறைவடைகிறது.

போலீசார் தகவல்

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த தொழிலாளர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞரின் பெயர் தீபக் என்பது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்திய லாம்போர்கினி கார் அவருடைய சொந்த கார் இல்லையாம். டெஸ்ட் டிரைவிற்காக ஓட்டிய போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினார். கார் ஓட்டும் போது திரையில் ஏதோ எரர் (error) மெசேஜ் வந்ததாகவும் அதை செக் செய்யும்போதே விபத்து ஏற்பட்டதாகவும் தீபக் போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து காரை போலீசார் பறிமுதல் செய்து தீபக்கை கைது செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+