For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிபர் ’கிம் ஜாங் உன்’ ஐக் கொல்ல அமெரிக்கா - தென் கொரியா முயற்சி..! - அலறும் வட கொரியா

By Shankar
Google Oneindia Tamil News

பியாங்யங்(வட கொரியா): வடக்கு கொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன் - ஐ கொல்ல அமெரிக்காவும் தென் கொரியாவும் முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பயோ கெமிக்கல் பொருளைக் கொண்டு இந்த படுகொலை முயற்சி மேற்கொள்ளப் படுவதாகவும் வடக்கு கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

அமெரிக்காவின் சிஐஏ வும் தென் கொரியாவின் தேசிய உளவுத் துறையும் இணைந்து இந்த முயற்சியில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

North Korea claims assassination plot to kill Kim Jong Un

தீவிரவாதிகளை வடக்கு கொரியாவுக்குள் அனுப்பி பயோ கெமிக்கல் பொருளை உபயோகித்து கிம் ஜாங்-ஐ படுகொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், அதை கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தென் கொரியா தேசிய உளவுத் துறையும் இதை மறுத்துள்ளது.

North Korea claims assassination plot to kill Kim Jong Un

சிஐஏ வின் முன்னாள் அதிகாரி பாப் பேயர், இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. சிஐஏ வுக்கு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. அப்படி ஏதாவது சிறப்பு அதிகாரம் வேண்டுமென்றால் பாராளுமன்ற ஒப்புதல் தேவை என்று கூறியுள்ளார்.

ஜெனரல் தாமஸ் செனட் பாதுகாப்பு கமிட்டி முன்பு, வடக்கு கொரியாவுக்கு எதிராக தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். ஒரு வேளை போர் மூண்டால், வடக்கு கொரியாவின் அணுகுண்டு உற்பத்தி ஆலையைத் தகர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

{promotion-urls}

English summary
North Korea accused that America’s CIA and South Korea’s National Intelligence Services jointly attempted to assassinate, their leader Kim Jong Un. North Korean government controlled new agency told, bio chemical substance was sent to Kum and it was detected. Pentagon and South Korea denied such allegations. Former CIA officer Bob Baer told it is not possible for CIA to get in to such activities without Congress approval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X