வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை அமல்.. மீறினால் அவ்வளவுதான்.. கிம் ஜாங்கின் வினோத ரூல்ஸை பாருங்க
பியாங்யாங்: வட கொரியாவில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தியுள்ளார். பெண்கள் இனி லிப்ஸ்டிக் போட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு வடகொரியா. இந்த நாட்டின் தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார். அதிபர் ஆட்சி நடைபெறும் வடகொரியா ஒரு கம்யூனிச நாடு என்று சொல்லப்பட்டாலும் அங்கு தற்போது சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது.

அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக மூச்சு விட முடியாது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறார்.
கிம் ஜாங் உன்: சர்வதேச நாடுகளுடன் மொதல் ஒருபக்கம் என்றால் உள்நாட்டில் பல விசித்திரமான கட்டுப்பாடுகளை விதித்து வடகொரியாவை பெரிய இரும்புத்திரை கொண்டு மூடி வைத்து இருக்கிறார் கிம் ஜாங் உன். அதாவது வெளியுலக தொடர்பு எதுவும் இன்றி திறந்த வெளி சிறையை போல வடகொரிய மக்கள் வாழ்ந்து வரும் அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
பல்வேறு கட்டுப்பாடுகள்: மேற்கத்திய நாட்டு படங்களை பார்க்க தடை, சிகை அலங்காரத்திற்கு தடை என வடகொரியாவில் பல விசித்திர கட்டுப்பாடுகள் உண்டு. அதேபோல இந்த கட்டுப்பாடுகளை மீறினால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு பல கொடூர தண்டனைகளும் விதிக்கப்படும். மக்கள் எப்படி உடை அணிந்து கொள்ள வேண்டும், எப்படி முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது வரைக்கும் அங்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
லிப்ஸ்டிக் போட தடை: பல வினோத கட்டுப்பாடுகளின் வரிசையில் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை வடகொரியாவில் விதித்து இருக்கிறார் கிம் ஜாங் உன். தற்போது வடகொரிய மக்கள் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிங் பூசிக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச வண்ணத்தை பிரதிபலிப்பது என்றாலும் கூட முதலாளித்துவத்தின் அடையாளாமாக சிவப்பு நிறம் இருப்பதாக கிம் ஜாங் உன் கருதுகிறாராம்.
அது மட்டும் இன்றி ரெட் லிப்ஸ்டிக் பூசுவது மிகவும் கவர்ச்சிரமாக இருக்கும் என்றும் எளிமையாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற விதிகளை மீறும் விதமாக ரெட் லிப்ஸ்டிக் இருப்பதால் அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாம். எனவே, பெண்கள் மிகவும் குறைந்த அளவிலான மேக் அப் மட்டுமே இனி போட முடியும்.
மீறினால் என்ன நடவடிக்கை: லிப்ஸ்டிக்கிற்கு இப்போது தடை விதிக்கப்படாலும் கூட ப்ளூ மற்றும் தோல் நிறத்திலான ஜீன்ஸ், குறிப்பிட்ட ஹேர்ஸ்டைல்ஸ்களை வைக்க தடை என பல கட்டுப்பாடுகளை அந்த நாடு தனது மக்களுக்கு விதித்துள்ளது.
சரி இந்த தடையெல்லாம் இருக்கட்டும்.. மீறினால் என்ன நடக்குமாம் தெரியுமா? அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வடகொரியா விதித்துள்ள ஆடை கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். அல்லது பொது இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் அத்தகைய ஆடையை அணிய முடியாதவறு கிழித்துவிடுவார்களாம்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications