அணுசக்தியில் இயங்கும்.. புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய வடகொரியா! அலர்ட் மோடில் அமெரிக்கா
பியாங்யாங்: அணு சக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியிருக்கிறது. இந்த கப்பலை தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை இந்தியா உட்பட வெறும் 6 நாடுகள்தான் இந்த கப்பலை உருவாக்கியிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் வடகொரியாவும் இணைந்திருக்கிறது.
அமெரிக்க கடற்படையின் அட்டாக் நீர்மூழ்கிக் கப்பல்களின் அளவுக்கு இணையாக இந்த கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன் இந்த கப்பலின் உட்புற கட்டுமானத்தை ஆய்வு செய்யும் படங்கள், அரசு ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல் இன்னும் நீரில் இறக்கப்படவில்லை.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவது, கிம் ஜாங் உன்னின் நீண்டகால லட்சியமாகும். அவர் முதன்முதலில் 2021ல் கட்சி மாநாட்டில் இதுபற்றி விவாதித்திருந்தார். இருப்பினும் தென்கொரியா சொந்தமாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துக்கொள்ள அமெரிக்க அனுமதியளித்ததால், அவசரமாக இந்த கப்பலை உருவாக்க கிம் உத்தரவிட்டிருந்தார்.
இத்தகைய கப்பல்கள் பல பாசிட்டிவ் விஷயங்களை கொண்டிருக்கிறது. டீசல்களால் இயங்கும் கப்பல்கள் எனில், பேட்டரிகளை ரீச்சார்ஜ் செய்யவும், டீசலை பெறவும் கரைக்கு வர வேண்டி இருக்கும். ஆனால், அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில், போதுமான உணவு இருப்பின் பல ஆண்டுகள் வரை அந்த கப்பலால் மேற்பரப்புக்கு வராமல் நீருக்கடியில் இருக்க முடியும். அணுசக்தி கப்பல்கள் வேகமானவை, அமைதியானவை. எனவே இதை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்.
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே பெற்றுள்ளன. சுமார் 8,700 டன் எடை கொண்ட இது, அமெரிக்க கடற்படையின் பெரும்பாலான வெர்ஜீனியா-வகுப்பு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு நிகரானது.
வடகொரியாவின் தற்காப்பு கொள்கைக்கு இந்தக் கப்பல் மிகவும் முக்கியமானது என்று கிம் கூறியுள்ளார். கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, "இந்த கப்பல் உண்மையில் மிக வலிமையான தாக்குதல் திறனை அடிப்படையாகக் கொண்டது. தேசிய பாதுகாப்பிற்கான சிறந்த கேடயம், மிக சக்திவாய்ந்த தாக்குதல் திறனே!" என்று கிம் கூறியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவது, வட கொரிய பாதுகாப்பை மீறும் செயல் என்றும், எதிர் கொள்ளப்பட வேண்டிய அச்சுறுத்தல் என்றும் கிம் தெரிவித்தார்.
என்னதான் வடகொரியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியிருந்தாலும், தென்கொரியாவிடம் இதைவிட சக்தி வாய்ந்த ஆயுதங்கள், கப்பல்கள் இருக்கின்றன. இப்படி இருக்கையில் இரண்டு நாடுகளும் வலுவான ஆயுதங்களை உருவாக்குவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications