எப்ப பார்த்தாலும் மாட்டுக் கறி.. ரகம் ரகமான மது.. பொளந்து கட்டிய கிம்.. மலைக்க வைக்கும் ஃலைப்ஸ்டைல்
உணவு பழக்கமே கிம் ஜோங் உன் உடல்நிலை ஆபத்துக்கு காரணம் என்கிறார்கள்
சியோல்: எல்லாத்துக்கும் காரணம் மாட்டுக்கறிதான்.. எதை பத்தியும் கவலைப்படாமல், தன்னுடைய சாப்பாட்டில் பீப் கறி, சீஸ், என பொளந்து கட்டி உள்ளார் கிம் ஜாங்.. மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
வடகொரியா அதிபர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார், இருக்கிறாரா, இல்லையா? எப்படி எதுவுமே தெரியாத நிலை உள்ளது.. இதனால் ஆளாளுக்கு தெரிந்த கருத்துக்களையும், யூகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அதே சமயம், கிம் உடல்நிலை பற்றியும் பலரும் கவலை கொண்டுள்ளனர்.. கிம்முக்கு 36 வயசுதான்.. ஆனால் 127 கிலோ உடல் எடையுடன் உள்ளார்.. அதுவே சிகிச்சைக்கு காரணம் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.. தற்போது அவரது முன்னாள் சமையல் கலைஞர் பியூஜிமோட்டோ என்பவர் கிம் பற்றி தன் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இவர் சொல்லும்போது, "உணவு விஷயத்தில் கிம் ஜாங்-க்கு எந்த கன்ட்ரோலும் கிடையாது.. 2015-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 175 பவுண்டுகள் மதிப்பில் 2 பாட்டில் மதுவை மடக் மடக்கென குடித்து முடித்துவிடுவார்.. சாப்பாட்டில் கோப் ஸ்டீக் எம்மெண்டால் சீஸ் போன்றவற்றை சேர்த்து கொண்டார்" என்றார்.
வடகொரியாவில் ஏராளமான மக்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில், கிம் ஜாங் விருந்து போல் தன்னுடைய சாப்பாட்டை உண்பது சர்வதேச பத்திரிக்கைகளில் விமர்சனமும் செய்யப்பட்டது. ஆனால் அதை பத்திகூட கிம் கவலையே படவில்லை.. 240 பவுண்டுகள் வரை விலை மதிப்பு மிக்க ஜப்பானிய வாகியு பீப், போயி கிராஸ் போன்றவற்றை சேர்த்து கொள்வார்.
சீனப் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுறாவில் இருந்து ஒரு சூப் தயார் செய்யப்படும்.. அதாவது ஏஸியன் ஸ்விப்ட்லெட் பறவைகளின் எச்சிலில் இருந்து தயாராகும் இந்த சூப்புக்கு கிம் ஜாங் அடிமையாம்... இதன் பெயர் 'Bird's nest soup'.. சீனாவிலிருந்து ஸ்பெஷலாக இறக்குமதி செய்யப்பட்டு செய்து தந்திருக்கிறார்கள்.. இப்படி ஒரு வகைதொகையே இல்லாமல் கிம் சாப்பிட்டதுதான் அவரது இந்நிலைக்கு காரணம் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications