அடங்காத கிம் ஜாங் உன்.. 10 ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! பெரும் பதற்றம்
சியோல்: தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி மிரட்டி உள்ளார். இதன்மூலம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வம்பிழுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரியாவும், தென்கொரியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே காலம் காலமாக பிரச்சனை உள்ளது. இதில் வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் முதல் அணுஆயுதம் வரை வடகொரியாவிடம் உள்ளது. ஆனால் தென்கொரியாவிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் கிடையாது.

இதனால் வடகொரியா, தென்கொரியாவை மிரட்டி வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. வடகொரியா - அமெரிக்கா இடையே பகை உள்ளது. அதேவேளையில் அமெரிக்காவின் நட்பு நாடாக தென்கொரியா உள்ளது. இதனால் தான் அமெரிக்க அதிபர்கள் தென்கொரியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன.
தென்கொரியாவில் அமெரிக்க வீரர்கள்
தென்கொரியாவில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் உள்ளனர். அதேபோல் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தென்கொரியாவின் பாதுகாப்புக்காக அமெரிக்கா இதனை செய்துள்ளது.
இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை கோபப்படுத்தி உள்ளது. இதனால் அவ்வப்போது அமெரிக்கா, தென்கொரியாவை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனைகளை கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார்.
கூட்டு பயிற்சி
இந்நிலையில் தான் இன்று அமெரிக்காவும், தென்கொரியா வீரர்களும் இணைந்து ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவும், தென்கொரியாவும் சேர்ந்து Freedom Shield என்ற பெயரில் கூட்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த பயிற்சி வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியின்போது இருநாட்டின் வீரர்களும் தங்களின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவது உள்பட கணினி சார் டெக்னாலஜி சார்ந்த ஒத்துழைப்பை சிறப்பாக மேற்கொள்வதை அடிப்படையாக கொண்டு செயல்படுவார்கள்.
அதோடு இருநாடுகளின் வீரர்களும் 'வார்ரியர் ஷீல்ட்' எனும் களப்பயிற்சியையும் மேற்கொள்வார்கள். இந்த பயிற்சின்போது தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளார்.
10 பாலிஸ்டிக் ஏவுகணை
அதாவது வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சுனான் பகுதியிலிருந்து கிம்ஜாங் உன் உத்தரவில் 10 ஏவுகணைகள் திடீரென்று ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானில் போய் விழுந்துள்ளது.
இதுபற்றி ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி கூறுகையில், ''வடகொரியா ஏவிய இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்துள்ளது. இந்த ஏவுகணைகளால் எந்தவொரு விமானங்கள் அல்லது கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை'' என்றார்.
அமெரிக்காவிடம் வம்பிழுக்கும் கிம் ஜாங் உன்
அதேபோல் வடகொரியா ஏவுகணைகள் ஏவியதை தென்கொரியாவின் ராணுவம் உறுதி செய்துள்ளது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 350 கிலோமீட்டர் (220 மைல்கள்) தூரம் பறந்து ஜப்பான் அருகே விழுந்ததாக தெரிவித்தார். தற்போது அமெரிக்காவும், தென்கொரியாவின் ராணுவமும் கூட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அமெரிக்கா, தென்கொரியா நாடுகள் வடகொரியாவை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதுமட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் குழு தெரிவித்துள்ளது. மேலும் தற்போதைய தென்கொரிய அதிபர் பிரதமர் கிம் மின் சியோக் அமெரிக்காவில் உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இருநாடுகள் இடையேயான உறவை பலப்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தைக்கு சில மணிநேரத்துக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications