டிரம்புக்கு அடுத்த அடி.. திடீரென சீனா சென்ற கிம் ஜாங் உன்! ஜின்பிங் - புதினுடன் கைகோர்ப்பு -பின்னணி
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சீனா, ரஷ்யா, இந்தியா ஒன்றிணைந்துள்ளது. சீனாவில் நேற்றுடன் முடிவடைந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இது உறுதியானது. அமெரிக்காவுக்கு இது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுவடு மறைவதற்கு முன்பாகவே அமெரிக்காவின் பகையாளியான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தனது ரயிலில் சீனாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இன்று ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளார். இது அமெரிக்காவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு சீர்க்குலைந்து விட்டது. இதனால் அமெரிக்காவை கைவிட்டுவிட்டு நம் நாடு, சீனாவுடன் நம் நாடு கைகோர்த்துள்ளது. நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.

இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடி பங்கேற்றனர். பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புதின் ஆகியோருடன் தனித்தனியே பேசினர். முதலில் ஜி ஜின்பிங் உடன் இருதரப்பு உறவுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் மோடி சந்தித்தார். இது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவுக்கு சென்ற கிம் ஜாங் உன்
சீனா, ரஷ்யா, இந்தியா கைகோர்த்துள்ளதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் டிரம்புக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, பிரதமர் மோடி இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
சீனா, ரஷ்யா, இந்தியா உறவு தொடர்பான விஷயம் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த சுவடு மறைவதற்குள் தான் திடீரென்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு சென்றுள்ளார்.
அணிவகுப்பு மரியாதை
இன்று அதிகாலையில் ஜி ஜின்பிங் தனது ரயிலில் சீனாவுக்கு சென்றார். 2ம் உலகப்போர் வெற்றி கொண்டாட்டத்தின் 80வது ஆண்டு விழா கொண்டாட்டம் நாளை சீனாவில் நடைபெற உள்ளது. ஜப்பானை தோற்கடித்ததை சீனா கொண்டாடும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
தியான்மேன் சதுக்கத்தில் நடக்கும் விழாவில் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
புதின் - ஜி உடன் சந்திப்பு
இந்த அணிவகுப்பில் பங்கேற்க கிம் ஜாங் உன்னிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சீனாவுக்கு சென்றுள்ளார். இன்று நடக்கும் அணிவகுப்பில் ஜி ஜின்பிங் - புதின் - கிம் ஜாங் உன் ஆகியோர் ஒன்றாக பங்கேற்க உள்ளனர்.
இதுவும் அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ரஷ்யா, சீனாவை போல் வடகொரியாவும் அமெரிக்காவின் பகையாளி நாடாகும். அதுமட்டுமின்றி கிம் ஜாங் உன் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி அமெரிக்காவையே மிரட்டி வருகிறார்.
அமெரிக்காவுக்கு சிக்கல்?
அதுமட்டுமின்றி உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காக படை வீரர்களை அனுப்பி உள்ளார் கிம் ஜாங் உன். அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது போல் ரஷ்யாவுக்கு படை வீரர்களை கிம் ஜாங் உன் அனுப்புகிறார்.
இதனால் தற்போது இந்த 3 தலைவர்களின் சந்திப்பு அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் 3 பேரும் அமெரிக்காவுக்கு எதிராக முக்கிய வியூகங்களை வகுக்க வாய்ப்புள்ளது.
இதனால் சீனாவில் நாளை நடக்கும் ராணுவ அணிவகுப்பு மற்றும் தலைவர்களின் சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டீம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications