திடீரென பல கிலோ எடையை இழந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங்.. டய்ட் காரணமாக?இல்லை மோசமான உடல்நிலை பாதிப்பா?

Subscribe to Oneindia Tamil

பியோங்யாங்: சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாகப் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கிம் ஜாங்-உன் எடையை இழந்துள்ளது அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்தியுள்ளது.

Recommended Video

    Kim Jong Un Weight Loss | திடீரென பல கிலோ எடையை இழந்த Kim Jong Un | Oneindia Tamil

    வடகொரியாவில் நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சியில் அதிபராக உள்ளனர் கிம் ஜாங்-உன். மர்மங்கள் நிறைந்த நபராகவே கிம் ஜாங்-உன் அறியப்படுகிறார்.

    தனக்குப் பிடிக்காத நபர்களை எவ்வித விசாரணையும் இன்றி கொல்வது, நாட்டு மக்களை மிக மோசமான நிலையில் வைத்திருப்பது என அவர் மீது சர்வதேச நாடுகள் மத்தியில் மிகக் கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

    திடீர் மாயம்

    திடீர் மாயம்

    கிம் ஜாங்-உன் கடைசியாகப் பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சுமார் நான்கு மாதங்கள் வரை அவர் எவ்வித நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அவர் இப்படி திடீரென காணாமல் போவது இது முதல்முறை இல்லை.

    நான்கு மாதங்கள்

    நான்கு மாதங்கள்

    கடந்த காலங்களிலும் திடீரென மாயமாவதை கிம் ஜாங்-உன் வழக்கமான ஒன்றாகவே வைத்துள்ளார். இந்நிலையில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு வடகொரியச் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் கடந்த ஜூன் 6ஆம் தேதி முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை கண்ட பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் பெரும் ஷாக்.

    உடல் எடை

    உடல் எடை

    ஏனென்றால் கிம் ஜாங்-உன் கணிசமாகத் தனது உடல் எடையை இழந்திருந்தார். பழைய படங்களுடன் அவரது தற்போதைய படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது தெளிவாகத் தெரிகிறது. அவர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாறியதால் உடல் எடை குறைந்துள்ளதா அல்லது ஏதேனும் உடல்நிலை பாதிப்பு காரணமாக எடை குறைந்துள்ளதா என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.

    140 கிலோ

    140 கிலோ

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிம் ஜாங்-உன் உடல் எடை 140 கிலோவாக இருந்தது. அவர் அதிபரான பிறகு மட்டும் சுமார் 50 கிலோ வரை உடல் எடை கூடியுள்ளது. செயின் ஸ்மோக்கரான கிம் ஜாங்-உனுக்கு அதிக உடல் எடை காரணமாக இதயநோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகம் என வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+