"வடகொரியாவின் ஏவுகணையால் அலறிய ஜப்பான்.." அவசர அவசரமாக விடுக்கப்பட்ட வார்னிங்.. கடைசியில் ட்விஸ்ட்!
டோக்கியோ: ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் விழலாம் அல்லது தீவுக்கு அருகில் விழலாம் என்று ஜப்பான் திடீரென எச்சரிக்கை விடுத்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உலகின் மர்மதேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. அந்த நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.

வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு சவால் விடுத்துக் கொண்டு இருக்கும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என தொடர்ந்து தனது ஆயுத பலத்தைக் கட்டி அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.
ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், கடும் பஞ்சத்தை அந்த நாடு எதிர்கொண்டாலும் தனது அடாவடி போக்கை சற்றும் மாற்றிக்கொள்ளவில்லை. அண்டை நாடான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பகமை காட்டி வரும் வடகொரியா அவ்வப்போது அந்த நாடுகளை சீண்டும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா தனது ஆயுத சோதனையை தீவிரப்படுத்தியது. குறிப்பாக கடந்த அமெரிக்கா - தென்கொரியாவின் ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் (செயற்கை சுனாமி) சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை நடத்தி அதிர வைத்தது.

இந்த நிலையில், வடகொரியா இன்று காலை வழக்கம் போல் தனது வேலையை தொடங்கியது. அதாவது, ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வடகொரியா நடத்திய இந்த ஏவுகணையால் ஜப்பானில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடகொரியா அவ்வப்போது ஜப்பான் கடல் பகுதிகளை நோக்கி ஏவுகணை சோதனை நடத்துவது வாடிக்கை என்றாலும் கூட நேற்று நடத்திய இந்த ஏவுகணை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
எமர்ஜென்சி அலார்ட்: வடகொரியாவின் இந்த ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் விழலாம் அல்லது தீவுக்கு அருகில் விழலாம் என்று ஜப்பான் திடீரென எச்சரிக்கை விடுத்தது. தீவில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு எமர்ஜென்சி அலார்ட் போனது. அதில், உடனடியாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வார்னிங்கை ஜப்பான் அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த எச்சரிக்கை தவறுதலாக கொடுக்கப்பட்டதாகவும் ஏவுகணை தீவை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வடகொரியா ஏவிய ஏவுகணையும் ஜப்பான் பிராந்தியத்தை தாண்டி கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடல் பகுதியில் விழுந்த தகவலையும் ஜப்பான் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஜப்பான் அரசு கொடுத்த தவறான அவசர எச்சரிக்கையால் மக்கள் மத்தியில் குழப்பமும் கோபமும் ஏற்பட்டது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஜப்பான் மக்கள், தவறுதலான எச்சரிக்கை கொடுத்ததற்காக கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications