மாஸ் என்ட்ரி.. சிங்கப்பூர் சென்றார் வடகொரிய அதிபர் கிம்.. வரவேற்பு கொடுத்த தமிழர்!
அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக, வடகொரியா அதிபர் கிம் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார்.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக, வடகொரியா அதிபர் கிம் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் வரவேற்பு அளித்துள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூரில் சந்திக்கிறார்கள். இவர்கள் சந்திப்பிற்காக ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 12ம் தேதி இருவரும் சந்திக்க உள்ளனர்.
உலக வரலாற்றில் இது முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

பெரிய எதிர்ப்பார்ப்பு
எலியும் பூனையுமாக இருந்த இரண்டு பேரும் நாளை மறுநாள் சந்திக்கிறார்கள். இது உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சந்திப்பின் முடிவில் அணு ஆயுதத்தை கைவிட போவதால் இன்னும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. எல்லா நாடுகளும் இந்த சந்திப்பைதான் எதிர்நோக்கி உள்ளது.
|
வரவேற்பு
இந்த நிலையில் சிங்கப்பூர் விமான நிலையத்தில், கிம்மிற்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை தமிழரான சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷணன் வரவேற்றார். விவியன் பாலகிருஷணன் தற்போது சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தந்தை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.
|
பாதுகாப்பு அதிகரிப்பு
இதனால் தற்போது சிங்கப்பூர் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லா விதமான போக்குவரத்து சேவைகளும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. சிங்கப்பூருக்கு உள்ளே வருபவர்களும், வெளியே செல்பவர்களும் கடும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டதால், ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹோட்டல்
இவர்கள் இருவரும் சிங்கப்பூரின் கெபல்லா ஹோட்டலில் சந்திக்க உள்ளனர். இந்த கெபல்லா ஹோட்டல் சென்டோஸா தீவில் உள்ளது. ஆனால் நாளை வரை கிம், தற்போது தீ ரெஜிஸ் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வர போயிங் 747 விமானத்தில் சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் வந்த கருப்பு நிற பென்ஸ் காருக்கு முன்னும் பின்னும் மூன்று பென்ஸ் கார்கள் பாதுகாப்பிற்கு வந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications