நாடகம் பார்த்த 30 பள்ளி மாணவர்களுக்கு தூக்கு தண்டனை.. வடகொரியா போட்ட உத்தரவு.. அதிரவைக்கும் காரணம்
சியோல்: தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியாவில், பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக தென்கொரிய செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக வடகொரியாவில் கறாரான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளன. அதாவது தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியா அரசு பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனையை கொடுத்திருக்கிறது என தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

Chosun TV மற்றும் Korea JoongAng Daily உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இது குறித்து தென் கொரிய அரசு அதிகாரிகளோ, வடகொரிய அரசு அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தென் கொரிய செய்தி ஊடகத்தால் கூறப்பட்டிருப்பதாவது, "வடகொரியாவிலிருந்து வெளியேறியவர்களால், அந்நாட்டு எல்லையில் சில யுஎஸ்பிக்கள் ரகசியமாக கசியவிடப்படுகின்றன. இதன் மூலம் தென் கொரியாவின் சீரியல்கள் வடகொரியாவுக்குள் நுழைகிறது. வடகொரிய அதிகாரிகள் கடுமையான சட்டங்கள் மூலம் அந்நாட்டின் குடிமக்களை கொடுமைப்படுத்துகின்றனர். வடகொரியாவின் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சார நிராகரிப்பு சட்டம் உள்ளிட்டவற்றால் தென் கொரியா மற்றும் ஜப்பானிய படங்கள் வடகொரியாவுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்டை நாடுகளின் படங்களை பார்த்ததற்காக ஒருவர் கொல்லப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2022ம் ஆண்டு கொரிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அடங்கிய பெண்டிரைவ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக ஒருவரை வடகொரிய அரசு சுட்டுக்கொன்றது. இதனை ஐ.நா உறுதி செய்திருக்கிறது.
அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு இளைஞர்களுக்கு k pop வீடியோவை பார்த்ததற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. இப்படி தொடர்ந்து செய்திகள் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகங்களால் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்த எந்த சரிபார்ப்பும் செய்யப்படுவதில்லை.
தென் கொரிய அதிகாரிகள் கூட இது குறித்து உறுதியாக எதையும் பொதுவெளியில் பேசுவதில்லை. வடகொரிய அதிகாரிகளும் இதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. எனவே சில நேரங்களில் இந்த செய்திகள் வெறும் செய்திகளாகவே சென்றுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications