கலங்கடித்த கிம் ஜோங்! ஆயிரம் சொல்லுங்க.. ஒரு நாட்டு தலைவர் இப்படித்தான் இருக்கணும்! கல்லுக்குள் ஈரம்
பியாங்யோங்: இந்தியாவில் கேரளா, மும்பை, டெல்லி, கொல்கத்தா என்று பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. விடாமல் பெய்யும் மழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதேபோல் வடகொரியாவிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
வடகொரியாவில் வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 5,000க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகம் திங்கள்கிழமை தெரிவித்தது. அங்கே இதுவரை வெள்ளம் காரணமாக 100 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமானோர் இதனால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளன.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இதற்கான இராணுவ மீட்பு நடவடிக்கையை தனிப்பட்ட முறையில்" வழிநடத்தி வியப்பை ஏற்படுத்தி உள்ளது. நேரடியாக வெள்ளத்திற்கு இடையே களத்திற்கே சென்று அவர் மீட்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) இதற்கான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.
அங்கே சனிக்கிழமையன்று பெய்த கனமழையால் நாட்டின் வடமேற்கு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வட கொரிய-சீன எல்லையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவே அங்கே ராணுவம் நேரடியாக சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில்தான் கிம் ஜோங் உன் நேரடியாக களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறார்.
கிம் மேற்பார்வையிட்ட மீட்பு நடவடிக்கையில், சுமார் 10 இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை மற்றும் அரசு படகுகள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் அதிபராக அவர் நேரடியாக களத்திற்கே வந்து மீட்பு பணிகளை செய்தது வரவேற்பை பெற்றுள்ளது.
பேரிடர் தடுப்பு முயற்சிகளை கிம் விமர்சித்தார்: அங்கே பேரிடர் தடுப்பு முயற்சிகள் முறையாக நடக்கவில்லை என்று நேரில் பார்வையிட்ட கிம் விமர்சித்தார்: சினுய்ஜு மற்றும் உய்ஜு நகரங்களில் இன்னும் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று விமர்சனம் வைத்தார். அங்கே மோசமான வானிலையால் மக்களை வெளியேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுவாக கிம் ஜோங் உன் மோசமான தலைவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் விமர்சனம் வைக்கப்படும் நிலையில் அதை எல்லாம் கிம் ஜோங் உன் உடைத்து போட்டுள்ளார். தன் மீதான பிம்பத்தை கிம் ஜோங் உன் உடைத்து இருக்கிறார்.
நிலச்சரிவு: இங்கே வயநாட்டில் இதேபோல் பிரதமர் மோடியை நேரில் பார்வையிட கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.
அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
❤️🇰🇵 Kim Jong Un is on a rescue operation to save his countrymen impacted by severe flooding.
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) August 3, 2024
What an incredible leader! pic.twitter.com/2VprhzRZ8i
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
நிலச்சரிவு: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 450 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட600 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இதன் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய மூன்று கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.












Click it and Unblock the Notifications