போருக்கு வந்த இடத்தில் ஆபாச படங்களுக்கு அடிமையான வடகொரிய வீரர்கள்! இப்படியொரு பிரச்சினையா.. வினோதம்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: உலகமே இப்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்தே கவனித்து வருகிறது. ஆனால், மறுபக்கம் ரஷ்யா உக்ரைன் மோதல் இப்போது மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட வடகொரிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போரில் சண்டையிட வந்த வடகொரிய வீரர்கள் இப்போது ஆபாசப் படத்திற்கு அடிமையாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மற்ற பகுதிகளில் இருந்து இப்போதும் தனித்து இருக்கும் நாடு வடகொரியா.. இந்த 21ம் நூற்றாண்டிலும் கூட பிற நாடுகளுடன் வடகொரியாவுக்குப் பெரிதாகத் தொடர்பு இல்லை.

russia ukraine world

வடகொரியா: அந்நாட்டில் உள்ள மக்களுக்கும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு இணையச் சேவை கூட இல்லை. ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இணையச் சேவை கிடைக்கும். இணையம் இல்லாததால் உலகில் பிற பகுதிகள் குறித்து அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. வடகொரிய அரசு தனது மக்களை அப்படியே வைத்திருக்கவே விரும்புகிறது.

இந்தச் சூழலில் தான் ரஷ்யாவுக்காகப் போரிட உக்ரைன் நாட்டிற்குச் செல்ல வடகொரியா தனது ராணுவத்தை அனுப்பியிருந்தது. உக்ரைன் போர் முனையில் இணைந்த இந்த வடகொரிய வீரர்கள் அனைவருக்கும் இப்போது இணையச் சேவை கிடைத்துள்ளது. இதுபோல எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாத இணையச் சேவையை அவர்கள் பெறுவது இதுவே முதல்முறையாகும். இதனால் அவர்கள் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.

ஆபாசப் படங்கள்: இதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களாம். குறிப்பாக ஆன்லைனில் ஆபாசப் படங்களை அவர்கள் பார்க்கத் தொடங்கியதாகவும் கொஞ்சக் காலத்திலேயே இந்த ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டதாகவும் தி பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் முனையில் உள்ள வடகொரிய வீரர்கள் இப்போது பெரும்பாலான நேரம் ஆபாசப் படத்தைப் பார்த்து அதிலேயே மூழ்கி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கிம் என்ன செய்வாரோ: பொதுவாகச் சின்ன தவறுகளுக்கே மரண தண்டனை விதிப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங். தனது ராணுவ வீரர்கள் ஆபாசப் படத்திற்கு இப்படி அடிமையான செய்தி தெரிந்தால் அவர் என்ன செய்யப் போகிறாரோ என்பதே இப்போது பேச்சாக எழுந்துள்ளது.

அதேநேரம் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் அதில் விளக்கப்படவில்லை. மேலும், வடகொரிய வீரர்களின் இணையப் பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்கள் எப்படிக் கிடைத்தது என்பதையும் தி பைனாஸில் டைம்ஸ் விளக்கவில்லை.

அமெரிக்க ராணுவம்: இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சார்லி டீட்ஸ் கூறுகையில், "வட கொரிய வீரர்கள் ரஷ்யாவுக்காகப் போரில் சண்டையிட உக்ரைன் போர் முனைக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களால் இணையத்தை இப்போது அணுக முடிகிறதா.. அதில் அவர்களை எதைப் பார்க்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. அதை உறுதி செய்யவும் முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

ரஷ்யா உக்ரைன் மோதல்: மத்திய கிழக்கில் ஒரு பக்கம் பதற்றம் என்றால் ரஷ்யா உக்ரைன் மோதல் மற்றொரு பக்கம் சத்தமே இல்லாமல் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. ரஷ்யா வடகொரியா இடையே நல்ல உறவு இருக்கும் நிலையில், இந்த போரில் ரஷ்யாவுக்காகப் போரிட வடகொரியா தனது ராணுவத்தில் உள்ள 7,000க்கும் மேற்பட்ட வட கொரிய வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் ரஷ்யாவில் வைத்துச் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும், ரஷ்ய ராணுவ உடையும் அவர்களுக்குத் தரப்பட்டது.

ஏகே 12 ரக துப்பாக்கிகள் உடன் பயிற்சி பெற்ற அவர்கள், மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பிற ஆயுதங்களுடன் பயிற்சி பெற்றனர். இது தொடர்பான வீடியோவும் கூட இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே பயிற்சிக்குப் பிறகு வடகொரிய வீரர்கள் இப்போது உக்ரைன் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் படைகள் இப்போது ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் முதல்முறையாக உக்ரைன் படைகள் உடனும் மோதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+