பிச்சை எடுப்பது இனி 'கிரிமினல் குற்றம்!' - நார்வே அரசு அறிவிப்பு
ஆஸ்லோ: உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான நார்வே, பிச்சை எடுப்பதை ஒழிக்க முடிவு செய்துள்ளது. இனி தங்கள் நாட்டில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ளது.
நார்வே நகரத் தெருக்களில் ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கையில் ஒரு சிறு டப்பாவை வைத்தபடி பிச்சை எடுப்பதைப் பார்க்கலாம். குறிப்பாக தலைநகர் ஆஸ்லோவில்.
கடந்த சில ஆண்டுகளில் நார்வேயில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆரம்பித்துள்ளதாம்.
பிச்சைக்காரர்கள்
5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நார்வேயில் ஆயிரத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருப்பதாக நோவா ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே.
கருத்துக் கணிப்பு
இந்த பிச்சைக்காரர்களை என்ன செய்யலாம் என்று நாடு தழுவிய அளவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் 60 சதவீதத்தின் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் மாதிரி என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
3 மாத சிறை
இனி நார்வேயில் பிச்சை எடுப்பவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை வழங்கவும் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் அந்நாட்டில் உள்ள நகராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 2015-லிருந்து இது அமலுக்கு வரக் கூடும்.
எதிர்ப்பு
ஆனால் இந்த சட்டத்துக்கு நார்வே நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை இந்தத் தடை குலைத்துவிடும். கருணையற்ற நாடு என்ற பெயர்தான் மிஞ்சும் என அக்கட்சிகள் கூறியுள்ளன.
உதவக் கூடாது என்ற எண்ணமே...
கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெல் இங்கல்ப் ரோப்ஸ்டட் கூறுகையில், "பிச்சையெடுப்பவர்கள் அத்தனை பேரும் கிரிமினல்கள் என்பதை ஏற்க முடியாது. இயலாதவர்கள்தான் பிச்சையெடுக்கிறார்கள். பிறருக்கு உதவ மனமில்லாதவர்களே, அவர்களை ஒழிக்கக் கேட்கிறார்கள். இந்த தடைச் சட்டம் தவறானது," என்றார்.
இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
நார்வே வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ப்ரோட் சுல்லன்ட் கூறுகையில், "பிச்சைக்காரர்கள் ஒரு பிரச்சினையே அல்ல. ஐரோப்பாவின் எந்த நகரத்தில் பிச்சைக்காரர்கள் இல்லை...! எங்கும் இருக்கிறார்கள். எந்த நாடும் இப்படி தடை போட நினைத்ததில்லை. ஒரு மனிதன், யாரையும் தொந்தரவு செய்யாமல் தனக்கு உதவி கோரி கையேந்த உரிமை இருக்கிறது. இந்தத் தடை தேவையற்றது," என்று கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications