சவுதி மட்டுமில்லை.. பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கும் மேலும் 2 இஸ்லாமிய நாடுகள்.. ஷாக் தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அந்த நாடு கடனில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் தான் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் விரட்டப்படுகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியா மட்டுமின்றி மேலும் 2 இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கிறது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் வறுமை அதிகம் உள்ளது. மக்கள் பெரிய அளவில் தவித்து வருகின்றனர். அதேபோல் நாட்டின் நிதி நிலைமையும் சரியில்லை. பாகிஸ்தான் அரசின் தவறான கொள்கை முடிவால் திவால் நிலைக்கு சென்றது. இப்போது சர்வதேச அமைப்புகளிடம் கையேந்தி பெற்ற கடனில் பாகிஸ்தான் அரசு ஓடுகிறது.
இதனால் மக்களால் எளிதில் வறுமையின் பிடியில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுக்க தொடங்கி உள்ளனர். பலரும் வெளிநாடுகளில் பிச்சை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செல்கின்றனர்.
அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் தான். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமான பாகிஸ்தானியர்கள் சென்று பிச்சை எடுத்து வருகின்றனர். இந்த நாடுகள் பாகிஸ்தானுடன் நெருக்கமான நட்பு நாடுகளாக உள்ளன. அதேபோல் இந்த நாடுகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இதனால் பிச்சை எடுத்து அதிக வருமானத்தை ஈட்டும் வகையில் பாகிஸ்தானியர்கள் இந்த நாடுகளை குறிவைத்து வைத்து பயணிக்கின்றனர். சுற்றுலா அல்லது புனித யாத்திரை என்ற பெயரில் இந்த நாடுகளுக்கு செல்லும் பாகிஸ்தானியர்கள் விசா காலம் முடியும் வரை பிச்சையெடுக்கின்றனர். இதனால் தற்போது இந்த 3 நாடுகளும் பாகிஸ்தானியர்களை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி பிச்சையெடுக்கும் பாகிஸ்தானியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து வருகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் 51,000 பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பபி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பின் (Federal Investigation Agency) டைரக்டர் ஜெனரல் ரிஃபத் முக்தார் ராஜா உறுதி செய்துள்ளார். அதன்படி சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த புகாரில் 24,000 பாகிஸ்தானியர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் 6,000 பாகிஸ்தானியர்களையும், அஜர்பைஜான் 2,500 பிச்சைக்காரர்களையும் தங்களின் நாடுகளிடம் இருந்து வெளியேற்றி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் நட்பாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்களை வெளியேற்றி வருகிறது.
மாறாக அஜர்பைஜான் நாட்டுடன் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நட்பு வளர்ந்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நம் நாடு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக தாக்கியது. அப்போது, அஜர்பைஜான் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தானியர்களை வெறுத்து அந்த நாடு திரும்ப அனுப்பி வருவதும், பாகிஸ்தானியர்களை ஏற்க தயங்குவதும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications