போரில் இஸ்ரேல் ராணுவத்துடன் அமெரிக்க படைகள் கை கோர்க்கும் என சொல்லவில்லை.. ஜோ பைடன் விளக்கம்
டெல் அவிவ்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போருக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது பல்வேறு கேள்விகளுக்கு ஜோ பைடன் பதில் அளித்தார். அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் ஒரு நிமிடம் இஸ்ரேல் அதிர்ந்து போனது.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக தொடுத்தது. இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே 5 முறை போர் ஏற்பட்டு இருந்தாலும் இதுவரை அல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த போரினால் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தாக்குதலுக்கு காரணம்: காசா மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் நடத்த தயாராகி வருகிறது. இதற்கிடையே, தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டது உலகையே அதிர வைத்தது. இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஹமாஸ் அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது கை காட்டியது. இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் உக்கிரம் அடைந்து உள்ள நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்கு சென்றார்.
ஜோ பைடன்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், ஹமாஸ் அமைப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அமெரிக்கா உறுதி செய்யும். காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா அளிக்கும்" என்றார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதல் 13-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட ஜோ பைடன், தனது பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார். ஏர் போர்ஸ் விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
நான் அப்படி சொல்லவில்லை: குறிப்பாக இஸ்ரேல் மீது ஹெஸ்பெல்லா பயங்கரவாதிகள் போரை முன்னெடுத்தால் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் அமெரிக்க ராணுவமும் கை கோர்க்கும் என்று இஸ்ரேலிடம் கூறியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாக வெளியான தகவல் பற்றி கருத்து தெரிவித்த ஜோ பைடன், " அந்த தகவலில் உண்மையில்லை, நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை' என்றார்.
தொடர்ந்து ஜோ பைடன் கூறுகையில் "காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செய்வதற்காக 20 டிரக்குகளை அனுமதிக்க எகிப்து அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார்" எனவும் தெரிவித்தார். இஸ்ரேலில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ள ஜோ பைடன், இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த உரையாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான்












Click it and Unblock the Notifications