For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரி மிரட்டல்... ஒபாமா கேர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 70 லட்சம் பேர் பதிவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒபாமா கேர் என்னும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் , ஒபாமா கேர் எனும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் அமெரிக்கர்கள் அனைவரும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

மார்ச் 31ம் தேதி கடைசித் தேதி என்றும், அதைத் தவற விடுபவர்களுக்கு அவர்களுடைய ஆண்டு வருமானத்தில் ஒரு சதவீதத்தை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடஹ்ன் விளைவாக நேற்று வரை சுமார் 70 லட்சம் மக்கள் இக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

எதிர்ப்பு....

ஏழை மக்களுக்கு கட்டாய மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒபாமா கேர் திட்டத்துக்கு. அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

குற்றச்சாட்டு....

அனைவரையும் காப்பீட்டுத் திட்டத்தில் வற்புறுத்துவது, சாதாரன குடிமகன்களின் வாழ்க்கையில் அரசு தேவையின்றி தலையிடும் செயல் என்று அக்கட்சி குற்றம் சாட்டியது.

வரவேற்பு...

இருப்பினும் பொதுமக்களிடையே இந்த திட்டத்துக்கு நல்லா வரவேற்பு கிடைத்துள்ளது.

எச்சரிக்கை...

இதற்கிடையே அமெரிக்க அரசு இக்காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்களுக்கு வருமானத்தில் ஒரு சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என விடுத்த மிரட்டலின் விளைவாகவும் அதிகப்படியான மக்கள் இதில் இணைந்தனர்.

70 லட்சம் மக்கள்....

கடைசி நாளான மார்ச் 31ம் தேதி வரை, 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கட்டாய வரி...

இதன்படி இக்காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு சதவீதம் வரி செலுத்தும் கட்டாய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

English summary
The first annual enrollment period for Obamacare scheme under the health law ended on 31st march. Nearly 7 million people were enrolled in the scheme till yesterday when it opened in last October.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X