அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய் விலையை குறைத்த சவுதி: சூட்சமம் என்ன?
லண்டன்: சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய்யின் விலையை குறைத்ததால் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து பேரல் ஒன்று ரூ. 5 ஆயிரத்து 31க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நாடாக உள்ள சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய் விலையை குறைத்துள்ளது தான்.

சவுதி அரசுக்கு சொந்தமான சவுதி ஆரம்கோ என்ற உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் அமெரிக்காவுக்கு அளிக்கும் கச்சா எண்ணெய்யின் விலை செவ்வாய்க்கிழமை குறைத்தது.
அமெரிக்கா தங்கள் நாட்டிலேயே பல எண்ணெய் கிணறுகளை தோண்டத் துவங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் அதிக அளவில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த போட்டியை சமாளிக்கவும், அமெரிக்காவில் தோண்டி எடுக்கப்படும் எண்ணெய்யை விட தங்கள் நாட்டு எண்ணெயை குறைந்த விலையில் அமெரிக்காவுக்கே விற்கவும் சவுதி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் ரஷ்யா, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளிடம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கவும் சவுதி இந்த விலை குறைப்பை செய்துள்ளது. சவுதியின் நடவடிக்கையால் எண்ணெய் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் சந்தையில் தாங்கள் மீண்டும் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தில் சவுதி செய்துள்ள விலை குறைப்பால் மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கவலை அடைந்துள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications