குண்டை தூக்கி போட்ட ஆய்வு.. டெல்டா வைரஸைவிட 3 மடங்கு ஆபத்தாம் ஒமைக்ரான்.. கலங்கும் நாடுகள்

டெல்டா வைரஸைவிட 3 மடங்கு பாதிப்பை தருமாம் ஒமைக்ரான்

Subscribe to Oneindia Tamil

ஜோகன்ஸ்பார்க்: ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று புது ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனாவைரஸ் பீதியில் இருந்தே இன்னும் நாம் மீள முடியாமல் உள்ளோம். கொரோனாவின் பாதிப்பு குறைய தொடங்கியபோது, அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறி விட்டது..

இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

 ஆபத்து

ஆபத்து

இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்றும் பெயரிடப்பட்டது... இதில் மிக மிக ஆபத்தானது டெல்டா வகை கொரோனாதான்.. பல மடங்கு வீரியம் கொண்டது.. பரவும் வேகம் கொண்டது.. அதனால்தான், டெல்டா வகை வைரஸ் பல்வேறு நாடுகளை தாக்கியது. இவைகளை பற்றி பீதி அடங்குவதற்கு முன்பேயே இன்னொரு வைரஸான ஒமிக்ரான் வந்துவிட்டது.. இது உருமாறிய வைரஸ்களை விட அளவுக்கு அதிகமான வீரியத்துடன் இருக்கிறதாம்.

 விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

வேகமாக பரவும் தன்மை கொண்டது.. ஆபத்தானதும் கூட என்கிறார்கள் விஞ்ஞானிகள்.. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் புதிய கொரோனா மாறுபாட்டு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது... இது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.. முதல் முறையாக நேற்று 2 பேருக்கு இந்த ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை கிளப்பி விட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்படுத்தியிருப்பதையடுத்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மறுபடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கொண்டு வரப்படுகின்றன.

 தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து

ஆனாலும், இந்த ஒமிக்ரான் வைரஸ் கலக்கம் நீங்கவில்லை.. இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. இப்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகளுக்கு இந்த ஒமிக்ரான் கட்டுப்படுமா? என்பதுகூட சந்தேகமாம். தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வைரஸ்

வைரஸ்

அதேசமயம் ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்க கூடியது என்றும், இதன் மூலம் அந்த வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தென்ஆப்பிரிக்க நாட்டின் விஞ்ஞானிகள் ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஒரு ஆய்வு நடத்தி உள்ளார்கள்.. அந்த ஆய்வு முடிவில், டெல்டா அல்லது பீட்டா வைரஸ்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஒமிக்ரான் வைரஸ் மறுபடியும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகமாகும் என்று தெரியவந்துள்ளது.

நாடு முழுவதிலும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளையும், ஒமிக்ரான் மாதிரிகளையும் ஒப்பிட்டு, அதன் நோய் எதிர்ப்பு திறனை டெஸ்ட் எடுத்து பார்த்ததில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது... கொரோனாவின் 3 அலைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கே மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு மறுபடியும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Bangalore Omicron நோயாளிகளிடம் இருக்கும் அந்த ஒற்றுமை | Oneindia Tamil
     தாக்கம்

    தாக்கம்

    கடந்த 27-ந்தேதியில் இருந்து இப்போதுவரை, 35,670 பேர் மறுபடியும் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. 90 நாட்கள் இடைவெளியில் அவர்கள் இப்படி வைரஸ் பாதிப்புக்கு மறுபடியும் உள்ளாகி இருப்பது அந்நாட்டு மக்களை கலங்கடித்து வருகிறது. எனினும் புதிய வகை வைரஸை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தி கொள்வதால் கடுமையான பாதிப்பையும், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும் என்பதும் தங்கள் கருத்தாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+