ஓமிக்ரான்: தடுப்பூசிக்குத்தான் கட்டுப்படாது.. சரி பிசிஆர் டெஸ்டிலாவது கண்டறிய முடியுமா?..ஹு விளக்கம்!
ஜெனீவா: பிசிஆர் சோதனை மூலம் ஓமிக்ரான் வைரஸ் குறித்து கண்டறிந்து வரும் நிலையில் வேறு ஏதேனும் சோதனைகள் மூலம் வைரஸை கண்டறிய முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா 4ஆவது அலையெல்லாம் ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை நவம்பர் மாதம் பரவும் என சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை பரவவில்லை. தற்போது ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் கடந்த வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் இது தற்போது போடப்படும் கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்படாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
மிக வேகமாக பரவிய இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் செய்யப்பட்ட டெல்டா வேரியண்ட் 8 முறை மட்டுமே உருமாற்றம் அடைந்தது. அதுவே அத்தனை பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவே இரண்டாவது அலைக்கு காரணமாகவும் அமைந்தது.
இந்த நிலையில் 32 உருமாற்றங்களை அடைந்துள்ள இந்த புதிய வைரஸ் கொடியது என்கிறார்கள். கொரோனா தடுப்பூசிக்குத்தான் இது கட்டுப்படாது. சரி கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் பிசிஆர் சோதனையிலாவது இந்த வைரஸை கண்டறியமுடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில் ஓமிக்ரான் வைரஸை தற்போது பிசிஆர் சோதனை மூலம் தான் சோதனை செய்து வருகிறோம். வேறு எந்த சோதனையிலாவது திறமையாக இந்த வைரஸை கண்டுபிடிக்க முடியுமா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Recommended Video
ஓமிக்ரான் பரவிய நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு பல நாடுகள் தடைவிதித்துள்ளது. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து சில நாடுகள் யோசித்து வருவதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications