ஓவர் ஸ்பீடு.. மொத்தம் 29 நாடுகளில் பரவிய ஒமிக்ரான்.. 373 பேருக்கு பாதிப்பு.. அதிர்ச்சி தகவல்

29 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்: உலகம் முழுவதும் 29 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து மற்ற நாடுளிலும் இந்த வைரஸ் தொற்றின் கவலை சேர்ந்து கொண்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த ஓமிக்ரான் வைரஸ் உலகெங்கும் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது..

இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இது மிக வீரியமிக்கது என்றும், பன்மடங்கு பெருகும் சக்தி கொண்டது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

 கவலை

கவலை

டெல்டா வைரஸ் போலவே தாக்கத்தை தந்துவிடுமோ என்ற கலக்கமும் உலக மக்களை சூழ்ந்து வருகிறது.. அதனால், பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்றைய தினம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. கர்நாடகாவில் 2 பேருக்கு இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

2 பேருமே லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும் அறிகுறிகளும் கூட தீவிரமாக இல்லை என்றும் மத்திய அரசு கூறியிருந்தாலும், இது கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் கண்டறியப்பட்ட 2 பேரில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் பெங்களூரை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டனர்... பலருக்கு டெஸ்ட் நடந்து வருகிறது...

அச்சம்

அச்சம்

இந்தியாவை போலவே பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதுமுள்ள அரசுகள், தொற்று பாதித்த நாடுகளுடனான விமான சேவையை உடனடியாக ரத்து செய்துள்ளன. இதைதவிர தற்போது மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.. உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.. அந்த அளவுக்கு இதன் வேகம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது.

 29 நாடுகள்

29 நாடுகள்

இவற்றில் தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் முதலில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.. இந்த லிஸ்ட்டில் தற்போது கானா, நைஜீரியா, நார்வே, சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவல் ஏற்பட்டு உள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுவதும் 29 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்ற நாடுகளுக்கும் அச்சத்தை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+