பிரபல நடிகர் கொலை வழக்கு.. தாதாவாக மாறிய தொழிலதிபர்.. கேர்ள் ஃப்ரண்டுகளுடன் 24 ஆண்டுக்கு பிறகு கைது
டாக்கா: வங்கதேச நடிகரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாகவே இருந்த தொழிலதிபர் ஒருவர் 24 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசக்கில் 1990 களில் பிரபலமான நடிகராக இருந்தவர் சோஹல் சவுத்ரி. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி டிரம்ஸ் கிளப்பில் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 9 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தொழிலதிபர் ஆஷிஷ், அஜீஸ் முகமது பாய் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆஷிஷ் ராய்
இந்த வழக்கில் ஆஷிஷ் ராய் சவுத்ரி தலைமறைவாகவே இருந்தார். அந்த காலகட்டத்தில் பெரிய விஷயமாக பேசப்பட்ட இந்த கொலை சம்பவம தொடர்பாக தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆஷிஷ் ராய் வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

24 ஆண்டுகள்
இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு தொழிலதிபரான ஆஷிஷ் நிழல் உலக தாதாவாகவே மாறியிருந்தது தெரியவந்தது. அவர் கடந்த 24 ஆண்டுகளாக போலியான பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்காவிற்குள் நுழைந்துள்ளார். அங்குள்ள பிங்க் சிட்டி ஷாப்பிங் மாலுக்கு அருகில் உள்ள குடியிருப்பில் அவர் வசித்து வந்தார்.

நோட்டமிட்ட போலீஸ்
அந்த குடியிருப்புக்கு அவ்வப்போது சந்தேகத்துக்கு இடமான நபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டை உளவாளிகளை வைத்து டாக்கா போலீஸார் நோட்டமிட்டனர். பின்னர் அங்கிருப்பது கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆஷிஷ் என்பதை அறிந்ததும் துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது.

அதிர்ச்சி
அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் அங்கு ஆஷிஷை கண்ட போது அதிர்ச்சி அடைந்தனர். உடம்பு குண்டாகி ஆளே அடையாளம் தெரிாயமல் இருந்தார். அவருடன் இரு கேர்ள் பிரண்டுகளும் இருந்தனர். வெளிநாட்டு மதுபானங்களை குடித்து கொண்டிருந்தார்.

ஆஷிஷை கைது செய்த போலீஸ்
போலீஸாரிடம் ஆஷிஷ் நான் அப்பவே முன்ஜாமீன் வாங்கிவிட்டேன் என தெரிவித்தார். இதெல்லாம் செல்லாது செல்லாது என சொல்லி ஆஷிஷையும் அவரது கேர்ள் பிரண்டுகளையும் கைது செய்தனர். 24 ஆணடுகளுக்கு பிறகு இந்த ஆஷிஷ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications