மியான்மர்: பச்சை மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 70 பேரின் நிலை என்ன?
யாகூன்: மியான்மரின் வடக்கு பகுதியில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தொழிலாளர் பலியாகிவிட்டார். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.
சீன எல்லையில் மியான்மரில் கச்சின் மாகாணத்தில் பாகந்த் என்ற இடத்தில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
குறைந்த அளவு ஊதியத்தில் இவர்கள் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. மிகவும் லாபகரமான தொழிலாக உள்ள நிலையில் இங்கு ஆண்டுதோறும் பலர் இறக்கிறார்கள்.

சீனா
இந்த மாணிக்கத்தை அண்டை நாடான சீனா மிகவும் விரும்புவதாக சொல்லப்படுகிறது. உலகில் கிடைக்கும் பச்சை நிற மாணிக்கக் கற்களில் 90 சதவீதத்தை மியான்மர் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மோதல்கள் வெடித்தது.

பொருளாதார நெருக்கடி
அது போல் கொரோனாவால் பொருளாதார பிரச்சினைகளை மக்கள் சந்தித்ததாலும் பண தேவைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் இது போன்ற ஆபத்தான சுரங்கங்களில் புலம்பெயர்ந்த மக்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டு ராணுவ ஆட்சி நடைபெறுவதால் அபாயகரமான மற்றும் சட்டவிரோத சுரங்கங்களில் சீர்திருத்தம் கொண்டு வரும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

பச்சை நிற மாணிக்கக் கற்கள்
இந்த நிலையில் பச்சை நிற மாணிக்கக் கற்களை வெட்டும் சுரங்கத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 25 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த 70 முதல் 100 பேரின் நிலை என்னவென தெரியவில்லை.

200 மீட்பு படையினர்
200-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் அருகில் ஏரி இருப்பதால் அங்கு படகுகளுடன் மீட்பு குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டும் மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு இந்த சுரங்கத்தில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications