இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
பதுளை: இலங்கையில் உலகிலேயே உயர்ந்த, மிகப் பெரிய ரத்தின கற்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தற்போது 802 கிலோ எடை கொண்ட ரூ7,500 கோடி இந்திய மதிப்புடைய ரத்தினக் கல், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விலை உயர்ந்த ரத்தின கற்கள் அதிக அளவில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. ரத்தினாபுரா பகுதியில் இந்த ரத்தினக் கற்கள் கண்டெடுக்கப்படுகின்றன. 2021-ம் ஆண்டு பெரிய நீல நிற ரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டது. அதுதான் அப்போது உலகின் மிகப் பெரிய ரத்தினக் கல்லாக அறிவிக்கப்பட்டது. அந்த ரத்தின கல்லுக்கு குயின் ஆஃப் ஆசியா எனவும் பெயரிடப்பட்டது. அது 310 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதற்கு முன்னதாக உலகின் மிகப் பெரிய நட்சத்திர வடிவிலான ரத்தின் கல்லும் அங்குதான் கண்டெடுக்கப்பட்டது. அது 510 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதற்கு அதிர்ஷடக் கல் எனப் பெயரிடப்பட்டது.

இந்த வரிசையில் தற்போது மற்றொரு மிகப் பெரிய ரத்தினக் கல் இலங்கையில் கிடைத்துள்ளது. இதன் எடை 802 கிலோ. சந்தை மதிப்பில் ரூ7,500 கோடி. இலங்கையின் பதுளையில் இந்த ரத்தின கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இயற்கையான ஒளி ஊடுருவல் தன்மை உடைய நீல நிறம் கொண்ட படிகம் எனவும் அழைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications