6 குழந்தைகளை பெற்ற கையோடு கழுத்தை நெறித்துக் கொன்ற பேய்
உடா: அமெரிக்காவில் பெண் ஒருவர் தனக்கு பிறந்த 6 குழந்தைகளை கொன்று உடல்களை அட்டைப்பெட்டிகளில் போட்டு கராஜில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிளசென்ட் குரூவைச் சேர்ந்தவர் மெகன்(39). அவர் பள்ளியில் தன்னுடன் படித்த வெஸ்ட் ஹன்ட்ஸ்மேன் என்பவரை தனது 18வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.
மெகன் 1996ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை 6 குழந்தைகளை பெற்றுள்ளார். அந்த குழந்தைகள் பிறந்த உடன் அவற்றை கழுத்தை நெறித்துக் கொன்று உடல்களை பிளாஸ்டிக் பையில் போட்டு அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வீட்டின் பின்புறம் இருக்கும் கராஜில் வைத்துவிட்டார். இதையடுத்து 7வதாக இறந்தே பிறந்த குழந்தையின் உடலையும் கராஜில் வைத்துள்ளார்.
ஒரு நாள் வெஸ்ட் கராஜில் ஒரு அட்டைப் பெட்டியை திறந்தபோது அதில் குழந்தையின் உடல் இருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதையடுத்து போலீசார் வந்து தேடியபோது 7 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் 2006ம் ஆண்டு வெஸ்ட் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி மாதம் தான் விடுதலை ஆனார்.
இதற்கிடையே மெகன் வெஸ்டை பிரிந்து காதலர் பிராடியுடன் வாழ்ந்து வந்தார். குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அது குறித்து பிராடி மெகனிடம் கேட்டதற்கு தனக்கு ஒரு குழந்தை இறந்து பிறந்ததாகவும் அதனால் பயந்துபோய் அதன் உடலை மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் 6 குழந்தைகளை கொலை செய்ததை மெகன் பிராடியிடம் கூறவில்லை.
இந்நிலையில் குழந்தைகளை கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் மெகன். இந்த வழக்கு உடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications