ஓவனுக்குள் மறைந்து அண்ணனுடன் கண்ணாமூச்சி விளையாடிய குழந்தை பலி
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஹூஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த 19 மாதக் குழந்தை சமையல் செய்யும் ஓவனில் ஒளிந்தபோது பலியானது.
இது குறித்து அருகில் வசிக்கும் கீனா டேனிஸ் என்பவர் கூறும்போது,
ஜெசியிரா நிகோலே மிகவும் சுட்டியான குழந்தை. அந்த குழந்தையை தனது 5 வயது மகனுடன் வீட்டில் தனியாக விட்டுவிட்டு, குழந்தையின் தாயார் வேலைக்குச் சென்றுவிட்டார்.
அப்போது, தனது சகோதரனுடன் விளையாடிகொண்டிருந்த ஜெசியிரா தவறுதலாக ஓவனிற்குள் சென்று மறைந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து அவரது தாய் வீட்டிற்கு திரும்பிய போது குழந்தையை காணவில்லை என்று அக்கம்பக்கத்தில் விசாரித்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை கிடைக்கவில்லை.
இந்நிலையில், சமைப்பதற்காக ஓவனைத் திறந்த போது அதில் குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ஹூஸ்டன் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தையின் தாயாரிடமும் அவரது காதலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications