கண்ணிமைக்கும் நேரத்தில் சுனாமியை கூட ஏற்படுத்தும் பயங்கர ஆயுதம்... இரண்டே நாடுகளிடம் தான் இருக்கு!
மாஸ்கோ: இந்தியா பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்தியா காலி செய்தது. இதையடுத்து இப்போது உலகெங்கும் ராணுவங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது. அப்படி தான் ஒரு ஆயுதம் குறித்து நெட்டிசன்கள் தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். உலகிலேயே இரு நாடுகளிடம் மட்டுமே இருக்கும் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் சுனாமி கூட வரும் ஆபத்து இருக்கிறதாம்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலில் இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த விவாதம் இணையத்தில் நடந்து வருகிறது. மேலும் உலகெங்கும் ராணுவங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது.

அதிநவீன ஆயுதம்
அப்படி இணையத்தில் அதிகம் விவாதிக்கப்படும் ஆயுதங்களில் ஒன்று, பயன்படுத்தப்பட்டால் சுனாமியை கூட ஏற்படுத்தக்கூடும். இந்த ஆயுதம் இப்போது உலகிலேயே இரண்டு நாடுகளிடம் மட்டுமே இருக்கிறதாம். அதில் ஒன்று இந்தியாவின் நீண்ட கால நண்பராகும். அப்படி என்ன ஆயுதம். இந்தியாவின் எந்த நட்பு நாட்டிடம் அந்த ஆயுதம் உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரஷ்யா
இந்தியாவின் நீண்டகால நண்பரான ரஷ்யா தான் அந்த நட்பு நாடு. ரஷ்யாவிடம் அணுசக்தியால் இயங்கும் நீருக்கு அடியில் பாய்ந்து சென்று தாக்கக்கூடிய போஸிடான் என்ற ஆயுதம் இருக்கிறது. கடந்த 2015ல் ரஷ்யா முதலில் இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.. அதை அப்போது "ஸ்டேட்டஸ்-6 ஓசியானிக் மல்டி பர்பஸ் சிஸ்டம்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.
போஸிடான் என்றால் என்ன?
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், போஸிடான் என்பது நீருக்கு அடியில் பயணிக்கும் ஒரு வகை ட்ரோன் ஆகும். இந்த போஸிடானால் அணு ஆயுதங்களைக் கூட எடுத்துச் செல்ல முடியும். கடந்த 2015ம் ஆண்டிலேயே இது குறித்த தகவல்கள் வெளியானாலும் 2018ல் தான் இதை ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். இது ரஷ்யாவின் ஆறு புதிய சூப்பர் ஆயுதங்களில் ஒன்று எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார்..
கடந்த 2022 மே மாதம் இந்த ஆயுதம் தொடர்பாக ரஷ்யா ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டது. அதாவது இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் 500 மீட்டர் உயரத்தில் கதிரியக்கத்துடன் கூடிய சுனாமி ஏற்படலாம் என்றும் இதனால் ஒட்டுமொத்த பிரிட்டனும் கூட நொடிகளில் மூழ்கிவிடும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சுனாமி கூட ஏற்படும்
போஸிடான் என்பது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தியால் இயங்கும் ஒரு ட்ரோன் ஆயுதம். அது நீருக்கு அடியில் பயணிக்கும் என்பதால் மற்ற ஆயுதங்களை விட இது வேகத்தில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் ஒரு முறை ஏவப்பட்டால் அதை நிறுத்துவது கடினம். எதிரிகள் நினைத்தாலும் நிறுத்தவே முடியாது. இந்த போஸிடான் 10,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கக் கூடியது. 1000 மீட்டர் ஆழத்திலும் இயங்கும். மேலும், அதன் 100 வாட் வேகத்தில் பாயும்.
ஒரு போஸிடான் இரண்டு அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். அது கடலில் வெடித்தால் அதீத ஆற்றல் வெளிப்படும். இதனால் கதிரியக்க சுனாமி ஏற்படவும் கூட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
வடகொரியா
அடுத்து இதுபோல ஆபத்தான ஆயுதம் கொண்ட நாடு வடகொரியா.. கடந்த 2024 ஜனவரி மாதம் வட கொரியா ஜப்பான் கடலில் நீருக்கு அடியில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் ஒரு புதிய ஆயுத அமைப்பைச் சோதித்தது. 'ஹால்-5-23' என இந்த ஆயுதத்தை வடகொரியா சோதனை செய்ததால் அப்போது இந்தோ-பசிபிக் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. அதற்குப் பதிலடியாக அப்போது அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நீருக்கு அடியில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வடகொரியாவின் இந்த ஆயுதமும் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மேலும், சுனாமி போன்ற அலைகளை உருவாக்கும் திறன் கொண்டது. இருப்பினும், இது ரஷ்யாவின் போஸிடான் அளவுக்கு வலிமையானது இல்லை எனச் சொல்லப்படுகிறது.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications