மரக்கட்டைகளுடன் மறைத்து லாரிகளில் போன டிரோன்கள்.. ரஷ்யா கண்ணில் மண்ணை தூவிய உக்ரைன்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் 4 விமான தளங்கள் மீது உக்ரைன் மிகெப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் சக்தி வய்ந்த வான் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதலை நடத்தி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது உக்ரைன். டிரக்குகளில் மரக்கட்டைகளுக்குள் டிரோன்களை வைத்து ரஷ்யாவுக்குள் கடத்தி கொண்டு சென்று பின்னர் ரிமொட் மூலமாக ஆபரேட் செய்யப்பட்டு டிரோன்களை தாக்க ஏவப்பட்டுள்ளது. ஆபரேஷன் ஸ்பைடர் என்ற பெயரில் இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாடு மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் ரஷ்யா, உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என திட்டமிட்டது.

operation-spiders-web-how-ukraine-hit-four-airbases-deep-inside-russia

உக்ரைன் ரஷ்யா போர்

சிறிய நாடுதானே என நினைத்த ரஷ்யாவுக்கு உக்ரைன் கடுமையான பதிலடி கொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை அளித்தன. இதனை வைத்து ரஷ்யாவுக்கு உக்ரைன் தண்ணீர் காட்டியது. உக்ரைனில் சில இடங்களை ரஷ்யா கைப்பற்றினாலும் கூட ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த அளவு போரில் வெற்றி கிட்டவில்லை.

தண்ணீர் காட்டிய உக்ரைன்

இதனால், மூன்றாவது ஆண்டாக உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போரால் பெருமளவு உயிர்சேதம் மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அமெரிக்க டிரம்ப் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை நிராகரித்து வந்த அதிபர் புதின், சமீபத்தில் தானாக போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தார். அதன்பின்னர், இருநாட்டு முக்கிய பிரமுகர்கள், துருக்கி நாட்டின் தலைநகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. ஆனால் போர் நிறுத்தம் செய்வதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதல்

போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க் கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது. ஆனாலும் உக்ரைன் மீது கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நாள் இரவில் 300-க்கும் அதிகமான டிரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் தருணத்தில் ரஷ்யாவின் இந்த மிகப்பெரிய தாக்குதலால் அமெரிக்காவும் கோபம் அடைந்தது.

புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது என கடுமையாக டிரம்ப் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமானப்படை தளம் மீது 40 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் இந்த சரமாரியான தாக்குதலில் ரஷ்யாவின் போர் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன.

எப்படி இந்த தாக்குதலை நடத்தியது?

குறிப்பாக ரஷ்யாவின் டியு 95 மற்றும் டியு -22 ரக போர் தளவாடங்களும் சேதம் அடைந்துள்ளது. இந்த ஆயுதங்களைத் தான் ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தி வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் எப்படி தாக்குதல் நடத்தியது? என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

சாலை வழியாக சென்று ரிமோட் கண்ட்ரோல்

அதாவது ஆபரேஷன் ஸ்பைடர் என்ற பெயரில் உக்ரைன் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவிற்குள் லாரிகளில் மறைத்து டிரோன்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மரக்கட்டைகளுடன் ரகசியமாக டிரோன்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவை குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் ரிமோட் மூலமாக உக்ரைனில் இருந்தபடியே ஆபரேட் செய்யப்பட்டு, விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வைக்கப்பட்டு இருக்கின்றன.

ரஷ்யாவின் கண்ணில் மண்ணை தூவி, டிரோன்களை அதன் சொந்த நாட்டிற்குள் சாலைவழியாக கொண்டு சென்று உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவுக்கு சுமார் 7 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று உக்ரைன் மதிப்பிட்டுள்ளது. உக்ரைன் நடத்திய இந்த தாக்குதலையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட டென்ஷன் ஏற்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளிலும் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+