ஜெயிலுக்கு செல்லும் பாராஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர்.. காதலியை கொன்ற ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு சிறை
காதலியை கொன்ற வழக்கில் பாராஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
கேப் டவுன்: காதலியை கொன்ற வழக்கில் பாராஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. தென்ப்பரிக்க நீதிமன்றம் அவருக்கு 13 வருடம் 5 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது.
2014ம் வருடம் பிரபல பாராஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தன் காதலி ''ரீவா ஸ்டீன்காம்ப்''ஐ கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். சரியாக காதலர் தினம் அன்று இந்த கொலை நடந்தது.

முதலில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் இவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து. கொலையை ஒப்புக்கொண்ட இவர் நான் தெரிந்து செய்யவில்லை, திருடன் என்று நினைத்து கொலை செய்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பின் இவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேலுமுறையீடு செய்தார். தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வந்துள்ளது.
அதன்படி தென்னாப்பிரிக்க நீதிமன்றம் அவரது தண்டனையை இரட்டிப்பாக்கி உத்தரவிட்டு இருக்கிறது. அவரது தண்டனை 13 வருடம் 5 மாதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications