நைஜீரிய ராணுவத்தினர் சுட்டதில் 150 தீவிரவாதிகள் பலி
லாகோஸ்: நைஜீரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே உண்டான மோதலில் 150 தீவிரவாதிகளும், 16 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 9 ராணுவ வீரர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவான போக்கோஹராம் என்ற தீவிரவாத அமைப்பு காபியா காட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். கடந்த வாரம் அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர்கள் 16 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9 ராணுவ வீரர்களைக் காணவில்லை என்றும், துப்பாகிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications