5 ஆண்டுகளில் 8500 பேர் பலி.. பாகிஸ்தானில் கொடி கட்டிப் பறக்கும் தீவிரவாதம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்களால் கடந்த 5 ஆண்டுகளில் 8500 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் எல்லைப் பகுதி பழங்குடியின மாகாணங்களில்தான் அதிக அளவிலான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது 1487 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2224 பேர் காயமடைந்துள்ளனர்.
8500 பேரில் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடக்கம். இதுதொடர்பான விவரத்தை பாகிஸ்தான் உள்துறை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் 5532 பேர்
கொல்லப்பட்டவர்களில் அப்பாவி மக்கள் 5532 பேர் ஆவர். காயமடைந்தவர்கள் 10,195 பேர். பாதுகாப்பு படையினர் 3157 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை 5988 ஆகும்.

பழங்குடியினர் பகுதிகளில்
பழங்குடியினர் பகுதிகளில்தான் அதிக அளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது 1487 பேர். காயமடைந்தோர் எண்ணிக்கை 2224 பேர். எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை 1470 பேர் ஆவர். காயமடைந்தோர் 2761 ஆகும்.

தீவிரவாதிகள் 3759 பேர்தான்
அதேசமயம், அப்பாவி மக்கள், பாதுகாப்புப் படையினரை விட தீவிரவாதிகள்தான் குறைந்த அளவில் கொல்லப்பட்டுள்ளனர். 3759 பேர்தான் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் எல்லைப் பகுதியில் 2530 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் பஞ்சாப் மாகாணத்தில் கொல்லப்பட்டனர். 342 பேர் சிந்து மாகாணத்திலும், 351 பேர் கைபர் பக்துன்வாலாவிலும், 435 பேர் பலுசிஸ்தானிலுிம், 7 பேர் இஸ்லாமாபாத்திலும், 3 பேர் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரிலும், ஒருவர் கில்ஜிட் -பல்திஸ்தான் பகுதியிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை
பாகிஸ்தானில் இந்தக் கால கட்டத்தில் 173 தீவிரவாதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் தூக்குத் தண்டனைக்காக காத்துள்ளனர்.

2001 முதல் இதுவரை 55,000 பேர் பலி
அதேசமயம், 2001ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அது முதல் இதுவரை 55,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications