சும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..!
தனக்கு தானே ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Recommended Video

உகாண்டா: "எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதே பிடிக்கலைன்னு சொல்லியாச்சு... சும்மா நொய்... நொய்...ன்னு தொந்தரவு பண்ணா என்ன செய்யது? அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு" என்கிறார் லுலு!! யார் இந்த லுலு?? என்னதான் பிரச்சனை இவருக்கு??
உகாண்டாவை சேர்ந்தவர்தான் இந்த லுலு ஜெமிமா. ஆக்ஸ்போர்டு பல்லைக் கழக மாணவி. இவருக்கு 32 வயசு ஆகிவிட்டது. ஆனால் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் எவ்வளவோ சொல்லி பார்த்தும், தனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அது மட்டும் இல்லை, வளர்ந்து வரும் குடியரசு நாடுகளில் கல்யாணம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான ஒன்று. அதாவது தலையாய கடமை என்று கூட சொல்லலாம்.
இப்பவே 32 வயசு
அதனால் லுலுவின் பெற்றோர் கல்யாணத்தை பண்ணி பார்க்க ரொம்பவே ஆசைப்பட்டார்கள். "எனக்கு இப்பவே 32 வயசு ஆயிடுச்சு. இப்ப போய் எனக்கு மாப்பிள்ளை கிடைக்குமா? இதனால நிறைய சிக்கல் வரும். அது மட்டும் இல்லை, பணப்பிரச்சனை வேற எனக்கு நிறைய இருக்கு... அதனாலதான் இந்த முடிவை எடுத்துட்டேன்" என்றார்.
[காலையில் எழுந்து.. மணப்பெண் கோலத்தில்.. கல்லறையில் அழுது புரண்டு.. காதல் உணர்வுபூர்வமானது! ]

பெற்றோர் ஷாக்
அப்படி என்ன முடிவு லுலு எடுத்தார் தெரியுமா? தன்னுடைய 32 பிறந்த நாள் அன்னைக்கு பக்கா மணப்பெண் போலவே டிரஸ் அணிந்து கொண்டு தனக்குத்தானே கல்யாணம் செய்துக்கிட்டார். இந்த கல்யாணத்துக்கு பெற்றோர் யாருமே வரவில்லை. தான் தன்னையே சுயமாகவே கல்யாணம் செய்துக்கிட்ட விஷயத்தை பெற்றோருக்கு போன் பண்ணி சொன்னால் லுலு. இதனை கேட்டு பெற்றோர் உட்பட எல்லோருமே ஷாக் ஆகி விட்டனர்.

வைரல் புகைப்படம்
லுலு கல்யாணமும், மணப்பெண் அலங்கார போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. லுலுவின் இந்த காரியத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். லுலு ஒரு துணிச்சலான பெண்... வெளிப்படையான பெண்... பொதுப்படையான எண்ணங்களை உடைத்தெறிய முன்வந்துள்ள பெண்.. என்றெல்லாம் ஆதரவு வார்த்தைகள் இணையத்தில் பரவி வருகிறது.

நானே கணவன்-மனைவி
"என்னம்மா லுலு..உன் கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறே?" என்று கேட்டால், "என்னை நன்றாக பார்த்து கொள்ளும், கவனித்து கொள்ளும், அக்கறையான ஒருவரைதான் நான் கல்யாணம் செய்துருக்கிறேன். அதனால எனக்கு கவலை இல்லை. இன்னையில இருந்து நான் கல்யாணம் ஆனவள். நான்தான் மாப்பிள்ளை, நான்தான் பொண்ணு!! நானே மனைவி... நானே கணவன்!!" என்கிறார் லுலு. சரி.. சரி... வாழ்த்துக்கள் மணம(க்)களே!!
எல்லாம் சரி.. "மத்ததெல்லாம்" எப்படி சாத்தியமாகும்.. லுலுவே இதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications