Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவன் தான் காரணம்.. இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்துக்கு மூளையான பயங்கரவாதி.. யார் இந்த பாரூக் அஹமது?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் தான். ஜம்மு காஷ்மீரில் பிறந்த அவன் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து கொண்டு ஸ்லீப்பர் செல் மூலமாக இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த பயங்கரவாதிகள் நம் நாட்டுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.

terror attack jammu kashmir LeT

இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பாகும். காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இவர்களை கண்டுப்பிடிக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் உயிருடன் கைது செய்யப்படுவார்கள். இல்லாவிட்டால் ராணுவத்தினர் சுட்டு கொல்வார்கள் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை தயார் நிலையில் உள்ளது. இதனால் விரைவில் பாகிஸ்தானுக்கு சரமாரியான பதிலடி என்பது கொடுக்கப்பட உள்ளது. இருப்பினும் இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்த விசாரணையை தற்போது என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்த நபர் யார்? பின்னணி குறித்து என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் பெயர் பாரூக் அஹமது.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருக்கிறார். இவர் ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் பிறந்தார். அங்குள்ள இவரது வீடு இடிக்கப்பட்டுள்ளது. பாரூக் அஹமது இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறார். அங்கிருந்தபடியே காஷ்மீர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு முழு காரணமாக மாறி உள்ளார்.

பயங்கரவாதி ஹபீஸ் சையத் வசிக்கும் இடம் கண்டுபிடிப்பு.. பாகிஸ்தான் அரசு செய்து கொடுத்த வசதியை பாருங்க
பாரூக் அஹமது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நெட்வொர்க் உள்ளது. அந்த நெட்வொர்க் வழியாக தான் கடந்த 22ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருந்து தனது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள மிகவும் பாதுகாப்பான செயலியை அவர் பயன்படுத்தியுள்ளார்.

கடந்த 1990 முதல் 2016ம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே அடிக்கடி பயணித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான அனைத்து மலைப்பாதைகளும் இவருக்கு நன்கு தெரியும். பாகிஸ்தானில் இருந்து மூன்று பகுதிகள் வழியாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ பாரூக் அஹமது உதவி செய்து வருகிறார்.

தற்போது அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு துணை போகும் நபர்களை அடையாளம் கண்டுள்ள காஷ்மீர் நிர்வாகம் அவர்களின் வீடுகளை குண்டுகள் வைத்தும், ஜேசிபி இயந்திரம் வைத்தும் இடித்து அகற்றி வருகின்றனர். தற்போது வரை 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள் அடைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+