Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிந்து நீரை நிறுத்தியது போருக்கு சமம்: பாகிஸ்தான் பிரகடனம்! சிம்லா ஒப்பந்தம் ரத்து! வான்வெளி மூடல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நீரை இந்தியா நிறுத்தியது. இது போருக்கு சமமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ள பாகிஸ்தான், தங்கள் நாட்டு வான் எல்லையில் நுழைய இந்திய ஏர்லைன்ஸுக்கு தடை விதித்திருக்கிறது. அதேபோல சிம்லா ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு, இந்தியா-பாகிஸ்தான் உறவை பாதிக்கும் விஷயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்துவதாகவும் சர்வதேச அரசியல் கூர்நோக்கர்கள் கூறியுள்ளனர்.

Kashmir terror Pakistan

ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

சிந்து நதிநீர் தொடர்பாக பாகிஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில், "சிந்து நதி நீரை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கையை பாகிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது. நீரை பங்கிடுவது உலக வங்கியின் முன்னிலையில் செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும். இப்படி இருக்கும்போது இதை ஒருதலைப்பட்சமாக நிறுத்த எந்த உரிமையும் கிடையாது.

தண்ணீருக்காக போர்

நீர் என்பது பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய தேசிய நலன். 240 மில்லியன் மக்களுக்கு இதுவே வாழ்வாதாரம். எனவே இந்த நீர் கிடைக்கும் உரிமையை எந்த விலை கொடுத்தாவது காப்பாற்றுவோம். எங்களுக்கு உரிய நீரை தடுத்து நிறுத்துவதும், அதை மடை மாற்றம் செய்வதும் போருக்கும் இணையான நடவடிக்கையாக நாங்கள் பார்க்கிறோம். எனவே இதற்கான முழு ராணுவ எதிர்வினையை எதிர்பார்க்கலாம்.

பேச்சுவார்த்தை கிடையாது

சர்வதேச ஒப்பந்தங்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் உலக சட்டங்களை இந்தியா மீறுகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்தியாவின் இப்படியான மோசமான எண்ணங்கள் மற்றும் சட்ட மீறல்களும் தொடரும் வரை இரு தரப்பில் போடப்பட்ட எந்த ஒப்பந்தங்களையும் பாகிஸ்தான் பின்பற்றாது" என்று கூறியிருக்கிறது.

என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீரின் பிரபலமான சுற்றுலா பகுதிதான் பைசாரன் பள்ளத்தாக்கு. இதற்கு பக்கத்தில் புகழ்பெற்ற துலியன் ஏரி இருக்கிறது. இந்த ஏரிக்கு செல்ல வேண்டும் எனில் இங்கிருந்துதான் போக வேண்டும். எனவே சுற்றுலா பயணிகள் இந்த பகுதியில் அதிக அளவில் குவிவார்கள். இப்பகுதி பஹல்காமிலிருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கிறது. 6 கி.மீ தொலைவுக்கு வாகன வசதிகள் எதுவும் கிடையாது. மாறாக குதிரைகள் மூலமாகத்தான் இங்கு போக முடியும்.

தாக்குதலும் கண்டனமும்

தாக்குதல் நடத்தினால் உதவி உடனடியாக கிடைக்காது என்பதை உணர்ந்துக்கொண்டுதான் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். பைசாரன் பள்ளத்தாக்கு திறந்தவெளி என்பதால் சுற்றுாலா பயணிகள் ஓடி ஒளிய முயன்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியாவின் பதிலடி

இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தைத்தை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. அதேபோல வாகா-அட்டாரி எல்லையையும் மூடியுள்ளது. சார்க் நாடுகள் திட்டம் மூலம் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாவும் ரத்த செய்யப்பட்டிருப்பதால், 48 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை கூட்டம்

மட்மல்லாது இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் 1 வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் இந்திய அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு நேற்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

புதிய சந்தேகம்

இந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது விரைவில் அந்நாட்டு ராணுவம் 'சர்ஃபேஸ்-டூ-சர்ஃபேஸ்' ரக ஏவுகணையை பரிசோதிக்க இருப்பதாக கூறியிருந்தது. இந்த தகவலை வேறு நேரத்தில் வெளியிட்டிருந்தால் பெரியதாக சந்தேகம் வந்திருக்காது. ஆனால், மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும் நேரத்தில் இத்தகவல் வெளியாகியிருப்பது புதிய சந்தேகங்களை கிளப்பியிருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

ஏவுகணை சோதனை

தீவிரவாத தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷ்ர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரம், தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் கூறியிருக்கிறது. மறுபுறம் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பும் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஆனாலும் பாகிஸ்தான் ஏவுணை சோதனையை நடத்த இருப்பதாக கூறியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான சிக்கலை மேலும் தீவிரமாக்கியிருந்தது.

ஒப்பந்தம் ரத்து

இப்படி இருக்கையில் மேலும் ஒரு நடவடிக்கையாக, இந்திய ஏர்லைன்ஸுக்கு பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்திருக்கிறது. சிந்து நதி நீர் பங்கீடு என்பது சர்வதேச ஒப்பந்தம். அதை மீறி தண்ணீரை நிறுத்துவது போருக்கு சமமானது என்று கூறி இந்த நடவடிக்கையை பாக். எடுத்திருக்கிறது.

அதேபோல சிம்லா ஒப்பந்தத்தையும் பாகிஸ்தான் ரத்து செய்திருக்கிறது. கடந்த 1971ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியா-பாக் இடையேயான பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்வது என இந்த ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+