இந்தியா நினைத்தால் பாகிஸ்தானில் "பேரழிவு" ஏற்படும்.. புலம்பும் பாகிஸ்தான் தீவிரவாதி.. என்ன மேட்டர்
இஸ்லாமாபாத்: இந்தியா பற்றி தேவையில்லாமல் பொய்யான தகவல்களைப் பரப்பி பிறகு வாங்கிக் கட்டிக் கொள்வதே பாகிஸ்தானுக்கு வேலையாக இருக்கிறது. இதற்கிடையே லஷ்கர்-இ-தைபா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி பகிரங்கமாகவே இந்தியா பற்றிப் பேசியுள்ளான். காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்காது என்ற அவன், இந்தியா நீர் பயங்கரவாதம் செய்வதாகவும் சாடியுள்ளான்.
இந்தியா பாகிஸ்தான் கடந்தாண்டு திடீரென மோதல் வெடித்தது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் சில நாட்கள் மாறி மாறி தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது.

தீவிரவாதி
இதற்கிடையே இந்த பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தைபா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் ஒருபோதும் பின்வாங்காது என்று அந்த வீடியோவில் கசூரி அடாவடியாக மிரட்டியுள்ளான்.
இந்தியாவுக்கு மிரட்டல்
பாகிஸ்தானில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய கசூரி, இந்தியாவை மிரட்டும் வகையில் பேசியுள்ளான். 1947 பிரிவினையின்போது, பாகிஸ்தானின் பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியா ஆக்கிரமித்துவிட்டதாகக் கசூரி வாய்க்கு வந்ததைப் பேசினார். அவர் மேலும், "நான் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறேன்.. சொந்த மக்கள், வெளியாட்கள், நண்பர்கள், எதிரிகள் என எல்லாருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்..
எங்களை நீங்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தாலும் சரி, உலகம் தலைகீழாக மாறி அரசுகள் கவிழ்க்கப்பட்டாலும் சரி, காஷ்மீர் மிஷனில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். இதை நான் திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான அமிர்தசரஸ், ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், ஜூனாகத், மனாவதர், ஹைதராபாத் தக்காணம் ஆகியவை பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்றும் அதை இந்தியா பறித்துவிட்டதாகவும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பொய்யான தகவல்களைக் கூறினார்.
உளறல்
அப்போது அந்தப் பயங்கரவாதி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் பேசினார். அவன் மேலும் கூறுகையில், "ஆறு மாதங்களுக்கு முன்பு, எங்கள் எதிரிக்கு (இந்தியா) பாடம் புகட்டினோம். ஒரு மாதம் முன்பு நான் அமீர்-இ-மோஹ்தரமை (ஹபீஸ் சயீத்) நான் சந்தித்தேன். அப்போது எங்களுடன் வந்த ஒருவர், இந்தியாவுக்கு எப்படிப் பதிலடி கொடுக்க வேண்டும் எனக் கேட்டார்.
அதற்கு ஹபீஸ் சயீத்.. இந்தியா நம்மை விட 100 மடங்கு பெரிய எதிரி. ஆனால் இறைவன் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டியுள்ளான்.. நாங்கள் அவர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம்.. அதனால் இந்தியா அடுத்த 50 ஆண்டுகளுக்கு எங்களைத் தாக்க நினைக்கவும் துணியாது" என்று வாய்க்கு வந்ததை அடித்துவிட்டார்.
நீர் பயங்கரவாதம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறி இருந்தது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா தனது நீர் தேவைகளுக்காக சிந்து நதி நீரைப் பயன்படுத்தலாம்.. இதைக் குறிப்பிட்ட கசூரி, இந்தியா "நீர் பயங்கரவாதம்" செய்வதாகச் சாடினார். மேலும், திடீரென நீரை வேண்டும் என்றே ரிலீஸ் செய்து பாகிஸ்தானில் திட்டமிட்டு வெள்ளத்தை கூட இந்தியா ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications