பேருந்து நிலையத்தில் விழுந்து நொறுங்கிய பாக். போர் விமானம்... விமானிகள் உட்பட 4 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தானில் போர் விமானம் ஒன்று பேருந்து நிலையம் மீது நொறுங்கி விழுந்ததில் விமானி உட்பட 4 பேர் பலியானார்கள்.
நேற்று பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறிய அவ்விமானம், அருகிலிருந்த கராச்சி புறநகர் பேருந்து நிலையத்திற்குள் விழுந்தது.
இதில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் நொறுங்கின. மேலும், அங்கிருந்த பல கட்டிடங்களும் சேதமடைந்தன.

இந்த கோரவிபத்தில் 2 விமானிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த 8 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், " விங் கமாண்டர் ஒருவரும், ஸ்குவாட்ரன் லீடர் ஒருவரும் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
எரிந்து கொண்டிருந்த விமான பாகங்கள் விழுந்ததில் பேருந்து நிலையத்திலும் தீப்பிடித்தது. எனினும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயலாற்றியதால் அங்கு பலத்த சேதம் தவிர்க்கப் பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications