பாகிஸ்தானில் ‘லாக்டவுன்' அறிவிப்பு.. ஈரான் வைத்த பெரிய ஆப்பு.. பதறும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடுத்துள்ளதால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்லும் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது.

pakistan-announces-lockdown-due-to-irans-strait-of-hormuz-issue

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்து வருகின்றன. இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த போர் நடவடிக்கையால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இந்த கடல் வழி பாதை வழியாக தான் உலகில் தினமும் 20 சதவீத கச்சா எண்ணெய் - கேஸ் சப்ளை இருக்கும். தற்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளதால் பல நாடுகளும் தவித்து வருகின்றன.

பாகிஸ்தானில் விலை உயர்வு

நம் நாட்டுக்கும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை வரும். இதனால் நம் நாடு மட்டுமின்றி, சீனா, பாகிஸ்தான் உள்பட ஆசியாவின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நம் நாடு, சீனா, பாகிஸ்தான் உள்பட சில நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்து விட்டுள்ளது.

இருப்பினும் கூட ஈரான் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஏனென்றால் பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கேஸ் வரும். தற்போது அதன் வரத்து குறைந்துள்ளதால் பாகிஸ்தானில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தானில் பாகிஸ்தான் கரன்சியில் 458.4க்கு (இந்திய மதிப்பில் ரூபாய் .152.6) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் 520.35 பாகிஸ்தான் ரூபாய்க்கு (இந்திய ரூபாயில் 173.23)க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மண்ணெண்ணெய் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இரவு நேர லாக்டவுன்

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்து வருகிறது. இருப்பினும் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போர் நிறுத்தம் வருவதில் சிக்கல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இரவு நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் துணை பிரதமர் இஷாக் தர், திட்டமிடல் துறைக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால், மாகாண தலைவர்கள் உள்பட அதிகாரிகள் பங்கேற்ற அவசர கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு பகுதிநேர லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருக்கும் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றை சரிவர பயன்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, பாகிஸ்தான் அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

என்னென்ன கட்டுப்பாடுகள்?

* பாகிஸ்தானில் உள்ள அனைத்து கடைகள், ஷாப்பிங் மால்கள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும். இந்த உத்தரவு வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழகைளை சேர்ந்து இந்த வாரம் முழுவதும் நடைமுறையில் இருக்கும்.

* அனைத்து வகையான ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் மற்றும் உணவு கூடங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்படக்கூடாது. அதேவேளையில் ஹோம் டெலிவரிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

pakistan-announces-lockdown-due-to-irans-strait-of-hormuz-issue

* அனைத்து வகையான திருமண மண்டபம், மஹால்கள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட கூடாது. இரவு அனைத்து திருமண விருந்துகளும் இரவு 10 மணியுடன் முடிக்க வேண்டும். இது திருமண மண்டபம்- மஹால்கள் மட்டுமின்றி வீடு மற்றும் பண்ணை வீடுகளில் நடத்தப்படும் திருமண விழாக்களுக்கும் பொருந்தும்.

எதற்கெல்லாம் விலக்கு?

* இருப்பினும் கூட மெடிக்கல், மருந்து பொருட்கள் விநியோகம் செய்யும் டைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பம்புகள், சிஎன்ஜி ஸ்டேஷன்கள், பேக்கரிகள், பால் மற்றும் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதேபோல் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சில பிரிவு தலைமையகங்களுக்கு மட்டும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க கில்கிட், முசாபராபாத் நகரங்களில் ஒரு மாதத்துக்கு இலவச பொதுப் போக்குவரத்து சேவையை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கான செலவை அரசு ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சம்

பாகிஸ்தானில் தற்போது இரவு நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களிலும் போர் தொடர்ந்தால் பாகிஸ்தான் மொத்தமாக முடங்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+