பயந்துபோன நாய் மாதிரி ஓடி வந்தது.. வாலை சுருட்டிய பாகிஸ்தான்.. பென்டகன் மாஜி அதிகாரி தகவல்
சென்னை: இந்தியா பாகிஸ்தான் போர் பாதியில் முடிந்தது.. இதில் பாகிஸ்தான் பலமாக அடிவாங்கியது உள்ளிட்ட பல காரணங்களால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகமான பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா தொடர்ச்சியான துல்லியமான தாக்குதல்களை நடத்தியபோது பாகிஸ்தான் தூங்கிக்கொண்டிருந்தது. இது பாகிஸ்தான் மக்கள் இடையே, ராணுவத்தின் இடையே, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரியும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த உறுப்பினருமான மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களாவது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம் என்று கூறி உள்ளார்.
இந்தியா தாக்குதல்
இந்தியாவின் தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.
துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதல் உட்பட பயங்கரவாதத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லா ஆகும். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார்.
அதிர்ச்சி
இந்த அளவிற்கு தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தை விட்டது குறித்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாம். இதன் காரணமாக பாகிஸ்தான், பயந்துபோன நாயைப் போல, வாலை கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு போர் நிறுத்தத்தை அடைய ஓடியது. தாங்கள் தோற்றது மட்டுமல்லாமல், மிக மோசமாகத் தோற்றார்கள் என்ற முழு யதார்த்தத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வந்தது. இப்போது நடந்ததை வைத்து பார்த்தால் இனி பாகிஸ்தான் ராணுவத்தால் எந்தத் தாக்குதலையும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம். பாகிஸ்தான் இராணுவத்திற்குள் பெரிய பிரச்சனை இருப்பது தெளிவாகத் தெரிகிறது, பாகிஸ்தான் சமூகத்தில் ஒரு புற்றுநோயாகவும் ராணுவம் மாறிவிட்டது. ராணுவமாக, அது திறமையற்றதாகவும் உள்ளது. அசிம் முனீர் தனது வேலையைத் தொடர்வாரா? என்பது சந்தேகம்தான். வரும் நாட்களில் நிறைய மாற்றங்கள் பாகிஸ்தானில் நடக்கலாம். பாகிஸ்தான் எதிர்பார்க்காத கசப்பான மாற்றங்களாக கூட அது இருக்கும்.
அடுத்த சில மாதங்களாவது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம் என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications