For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். ராணுவ படைத்தளபதி இன்று முக்கிய ஆலோசனை.. படைவீரர்களை நேரில் சந்திக்க முடிவு.. என்ன திட்டம்?

பாகிஸ்தான் நாட்டு ராணுவ தளபதி என்று அந்நாட்டு படைவீரர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Artcile 370 : சட்டப்பிரிவு 370 ரத்து- ஐ.நா தீர்மானத்துக்கு எதிரானது - பாகிஸ்தான்- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு ராணுவ தளபதி என்று அந்நாட்டு படைவீரர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

    இதனால் காஷ்மீரில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீரில் ஏற்கனவே இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தலைவர்கள்

    தலைவர்கள்

    அதேபோல் மிக முக்கியமான அரசியல் தலைவர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய தலைவர்களும் அங்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று வீட்டு சிறையில் இருந்த அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

    பாகிஸ்தான் என்ன

    பாகிஸ்தான் என்ன

    ஆனால் இதில் பாகிஸ்தான் இன்னும் வெளிப்படையாக எந்த விதமான அதிரடி நடவடிக்கைகளையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்னும் இதில் வெளிப்படையாக, அதிரடி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த நிலையில் புதிய திருப்பமாக பாகிஸ்தான் நாட்டு ராணுவ தளபதி என்று அந்நாட்டு படைவீரர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். ராணுவ தளபதி குமார் ஜாவீத் பஜ்வா இன்று ராணுவ வீரர்களை சந்திக்க உள்ளார். எல்லையில் செய்ய உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

    எப்படி

    எப்படி

    அதேபோல் அவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் செயலாளர்கள் உடன் இன்று காலை ஆலோசனை செய்ய உள்ளார். மேலும் பாகிஸ்தான் எல்லையில் இன்று காலை நேரடியாக களமிறங்கி பார்வையிட முடிவு செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,. இதனால் தற்போது பாகிஸ்தானிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Pakistan army chief to hold a meeting with officials after the removal of Article 350 in Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X