திரும்பிய பக்கமெல்லாம் அடி.. பலுசிஸ்தான் போராளிகளிடம் உதை வாங்கி ஓடிய பாகிஸ்தான் ராணுவம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதற்கிடையே இப்போது இந்தியப் பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், மற்றொரு பக்கம் பலுசிஸ்தான் போராளிகளும் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய ராணுவம் புதன்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் பாகிஸ்தானில் இறங்கி அடித்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியா- பாகிஸ்தான்
இந்திய ராணுவத்தின் இந்த மகத்தான வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான் பதிலடி தர முயன்று வருகிறது. ஏற்கனவே புதன் இரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் அது தோல்வி அடைந்தது. இந்தியப் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது. அதை இந்திய ராணுவமும் உறுதி செய்தது.
இதற்கிடையே வியாழக்கிழமை இரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்தது. காஷ்மீர் உட்பட எல்லையோரப் பகுதிகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால், அதையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
பதிலடி தர முயற்சி
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா தக்கப் பதிலடி தந்து வருகிறது. முதலில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்தியா தாக்குதலை நடத்தியதாகச் சொல்லப்பட்டது. பாகிஸ்தான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பாகிஸ்தானின் லாகூர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல்களால் பாகிஸ்தான் அச்சத்தில் இருக்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் அடி
இது ஒரு பக்கம் இருக்க பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் அடி வாங்கியிருக்கிறது. அங்கு பலுசிஸ்தான் போராளிகள் தனி நாடு கோரிப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இருப்பினும், அதை ஏற்காமல் பாகிஸ்தான் அங்கு ராணுவத்தைக் குவித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு மற்றொரு அடியாக பலுசிஸ்தான் போராளிகளும் பாக். ராணுவம் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக குவெட்டா என்ற பகுதியில் ராணுவத்தை நோக்கித் தாக்குதலை ஆரம்பித்ததாகவும் இதனால் பாகிஸ்தான் வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தான் போராளிகள்
பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாகாணமாகும். நிலப்பரப்பு அடிப்படையில் பார்த்தால் இதுதான் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாகும். அதேநேரம் மக்கள் தொக அடிப்படையில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது ஈரான் ஆப்கானிஸ்தான் உடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் தங்களைப் பாகிஸ்தானியர்களாகக் கருதிக் கொண்டதே இல்லை.
பலுசிஸ்தான் தனி நாடு என்றும் அதைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனச் சொல்லிப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆனால், அதை அறிவிக்க மறுத்து அங்கு ராணுவ அடக்குமுறையை பாகிஸ்தான் ஏவிவிட்டிருந்தது. அதைத் தாண்டியும் பலுசிஸ்தான் போராளிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள். இப்போது இந்தியத் தாக்குதலால் பாகிஸ்தான் திணறி வரும் நிலையில், சத்தமில்லாமல் பலுசிஸ்தான் போராளிகளும் பாக். ராணுவத்தை ஓட விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications