முட்டாளான பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்! பீட்சாவுக்கு ஆசைப்பட்டு ஏமாந்த கவாஜா ஆசிப்.. என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் பீட்சாவுக்கு ஆசைப்பட்டு முட்டாளாகி உள்ளார். பிரபலமான ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் கிளை என்று கூறி அவரை தொழிலதிபர்கள் ஏமாற்றி போலியான கிளையை திறக்க வைத்துள்ளனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள், ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் விளக்கம் வெளியான நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகிஸ்தானில் அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் என்றால் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். எதிரி நாடுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்து நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான பணியை செய்ய வேண்டும். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை அங்குள்ள தொழிலதிபர்கள் முட்டாளாக்கி உள்ளனர்.
அதோடு ‛பீட்சா'வுக்கு ஆசைப்பட்டு சென்ற பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஏமாந்துள்ளார். அதாவது கிஸ்தானின் சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக பீட்சா விற்பனை கடை திறக்கப்பட்டது.
இந்த கடை ‛பீட்சா ஹட்' என்ற பிரபல நிறுவனத்தின் கிளை என்று விளம்பரம் செய்யப்பட்டது. கடையின் முன்பகுதியில் ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த புதிய பீட்சா கடையை பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திறந்து வைத்தார். அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானது. இதனை ‛பீட்சா ஹட்' நிறுவனமும் கவனித்தது. அப்போது தான் ‛பீட்சா ஹட்' நிறுவனம் தனது புதிய கிளை எதையும் சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் திறக்காததை அறிந்தது. மேலும் யாரோ ஒருவர் அவர்களின் பெயரில் போலியாக கிளையை உருவாக்கி பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை வைத்து திறந்து விளம்பரம் தேடியதும் தெரியவந்தது.
இதையடுத்து ‛பீட்சா ஹட்' நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் திறக்கப்பட்டு இருக்கும் ‛பீட்சா ஹட்' என்ற கிளை எங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அது அங்கீகாரமின்றி திறக்கப்பட்டுள்ளது. அந்த கடை எங்களின் பெயர், பிராண்டிங்கை தவறாக பயன்படுத்தி இயங்குகிறது.
சர்வதேச அளவில் எங்களின் நிறுவனம் பீட்சா தயாரிப்புக்கு பின்பற்றும் சமையல் முறை, தரக்கட்டுப்பாடு, உணவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்றுவது இல்லை. எங்களின் வணிக அடையாளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளோம்'' என்று கூறியுள்ளது.
‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் இந்த அறிக்கை வெளியான நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை யாரோ ஏமாற்றி முட்டாளாக்கி இருப்பது தெரியவந்தது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை கிண்டல் செய்து வருகின்றனர்.
இதுபற்றி ஒருவர், ‛‛பாகிஸ்தானில் மட்டும்தான் ஒரு பாதுகாப்பு துறை அமைச்சர் போலியான பிட்சா ஹட் கிளையை திறந்து வைக்க முடியும். அவர் ரிப்பன் வெட்டி கேமராக்கள் முன்பு சிரித்து விட்டு வேறு செல்கிறார். ஆனால் அந்தக் கிளை பீட்சா ஹட் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு திறமையில்லாத ஒருவர் பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கிறார்'' என்று கூறி உள்ளார்.
அதேபோல் இன்னொருவர் உருது மொழியில், ‛‛இந்த மாகாணத்தில் ஏதாவது உண்மையானது இருக்கிறதா? இல்லையா?'' என்று அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இப்படியாக பலரும் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை ட்ரோல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications