புனித ரமலான் மாதத்தையொட்டி பாகிஸ்தானில் களை கட்டும் ‘முட்டை’ உடைக்கும் போட்டி!
இஸ்லாமாபாத்: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் ‘முட்டை' உடைக்கும் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ரம்ஜான் மாதத்தை ஒட்டி பழைய முட்டைச் சண்டையை இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதன்படி, நன்கு வேகவைத்த தங்களது முட்டைகளைக் கொண்டு எதிராளியின் முட்டைகளை உடைக்க வேண்டும். இது காலங்காலமாக பாகிஸ்தானில் விளையாடப் படும் ஒரு வகை போட்டி ஆகும்.

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு இருந்து வரும் இஸ்லாமியர்கள், இரவு நேரத்தில் இந்த விளையாட்டை மிகவும் ஆர்வமாக விளையாடி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆசாத் அலி என்ற இளைஞர் கூறுகையில், ‘மற்ற விளையாட்டுகளை விட இந்த முட்டை உடைக்கும் விளையாட்டில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்' எனக் கூறுகிறார்.
இந்த விளையாட்டின் விதிமுறைகள் மிகவும் எளிமையானவை. நம் கையில் இருக்கும் வேகவைத்த முட்டையால் எதிராளியின் வேக வைத்த முட்டையைத் தாக்க வேண்டும். இதில் எதிராளியின் முட்டை உடைய வேண்டுமே தவிர நமது முட்டை உடைந்து விடக்கூடாது.
இவ்வாறு கடைசி வரை தனது முட்டையை உடையாமல் பாதுகாப்பவர் போட்டியில் வென்றவர் ஆவார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications