உலகத்திலேயே இங்கதான் இந்த அநியாயம்.. பாகிஸ்தானில் போலியோ வைரஸ் பரவல் அதிகரிப்பு.. காரணம் தெரியுமா?
கராச்சி: பாகிஸ்தானில் போலியோ வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு எட்டு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் பதிவான மொத்த கேஸ்களை விட இது அதிகமாகும். போதாத குறைக்கு, அந்த நாட்டின் 46 மாவட்டங்களில் கழிவுநீர் மாதிரிகளில் கூட வைரஸின் பரவல் கண்டறியப்பட்டுள்ளன. கழிவுநீரில் வைரஸ் இருந்தால் அது சமூகத்தில் நீக்கமற பரவிவிட்டது என்று அர்த்தமாகும்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் மற்றும் கை கால் செயலிழப்பு அல்லது மரணத்தை ஏற்படுத்தும் போலியோ வைரஸ், தற்போது உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே உள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் தடுப்பு மருந்துகளால் அவை வேரறுக்கப்பட்டுவிட்டன. பழமைவாதம் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தடுப்பூசிகளுக்கு எதிராக பெரும் பிரச்சாரமே நடந்துவருகிறது. இதனால் மக்கள் இதுபோன்ற நோய்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

உலகம் முழுக்கவே போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்டால்தான் பிறருக்கு அது பரவாது. எனவே, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலும் வைரஸ் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். அல்லது, குழந்தைகளுக்கு, நாம் தடுப்பு மருந்துகளை தொடரந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலைதான் தொடரும். உலகம் முழுக்க வைரஸ் ஒழிக்கப்பட்டால்தான், மருந்தற்ற சமூகம் நோக்கி நாம் முன்னேற முடியும்.
பாகிஸ்தானை பொறுத்தளவில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் போலியோ பரவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கராச்சி, குவெட்டா மற்றும் பெஷாவர் போன்ற நகரங்கள் போலியோ நோய்க்கான முக்கிய பகுதிகளாக மாறியுள்ளன.
மக்கள் தொகை பெருக்கத்தோடு மோசமான சுகாதார கட்டமைப்பும் இங்குதான் உள்ளன. 2021-2023 க்கு இடையில் கராச்சியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு போலியோ பதிவாகவில்லை. GPEI (உலகளாவிய போலியோ ஒழிப்பு திட்டம்) மூலம் பாகிஸ்தான் முழுக்க கேஸ்கள் குறைந்தன. ஆனால், தெற்கு கைபர் பக்துன்க்வா, வடக்கு பாகிஸ்தானில் அதிக தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரங்கள் இருந்ததால் மக்களில் பலர் தடுப்பு மருந்துபோட்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து அனைவரது கவனமும் அங்கு போனது. கராச்சி போன்ற பகுதிகளில் போலியோ தடுப்பு நடவடிக்கைகள் குறைந்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications