For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவின் பொருளாதார கட்டமைப்புகளை தாக்கப் போகிறது இந்தியா.. பீதியில் பாக். அலறல்

சீனா செயல்படுத்தி வரும் பொருளாதார வழித்தட திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இந்தியா தாக்குதல் நடத்தப் போவதாக அஞ்சுகிறதாம் பாகிஸ்தான்.

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சீனா செயல்படுத்தி வரும் பொருளாதர வழித்தடத் திட்டத்தை இலக்கு வைத்து இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என பாகிஸ்தான் அச்சமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் டான் ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கில்கித்-பல்திஸ்தான் மாகாண அரசுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில், பாகிஸ்தான் - சீனாவின் பொருளாதார வழித்தட திட்டங்களை இலக்கு வைத்து இந்தியா தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

Pakistan fears India may attack CPEC installations

இதற்காக 400 இஸ்லாமிய இளைஞர்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அண்மையில் ராவிடம் இருந்து பணம் பெற்று செயல்படும் 12 பேர் பலுசிஸ்தான் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சீனா செயல்படுத்தி வரும் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஹாரகோரம் நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் உள்ளிட்டவை இந்தியாவின் இலக்கு.

இவ்வாறு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இதையடுத்து கில்கித்-பல்திஸ்தான் மாகாண அரசு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாம்.

English summary
The Pakistan Govt. is fearing an attack by India on installations of China-Pakistan Economic Corridor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X