‛அஸ்தமனமாகும் அரசியல்’’.. பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை! இனி அவ்வளவுதான்
இஸ்லாமாபாத்: சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி இன்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் வீரரான இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி உலககோப்பை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான் கான் அரசியலில் நுழைந்தார். தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைத்த இம்ரான் கான் பிரதமரானார். இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதில் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த வருடம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனாலும் இம்ரான் கான் வெளிவர முடியவில்லை. ஏனென்றால் இன்னொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதாவது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் பிரதமராக இருக்கும் நபர் உயரதிகாரிகளுடன் விரைவாக பேசும் வகையில் சைபர் கேபிள் சேவை பயன்பாடு உள்ளது. இந்த கேபிள் சேவையை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் இம்ரான் கான் மீதான சைபர் கேபிள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை என்பது அஸ்தமனமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications