பெஷாவர் பள்ளி தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு: பாகிஸ்தான் புது குண்டு
இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு பெஷாவரில் நடந்த பள்ளி தாக்குதலில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 132 பள்ளி குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் தற்போது தெரிவித்துள்ளது. இந்தியாவின் தொடர்பு குறித்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் விரைவில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் அளிக்க உள்ளாராம்.
பெஷாவர் தாக்குதல் குறித்த ஆதாரங்களை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மும்முரமாக சேகரித்து வருகிறது. ஆதாரங்களை சேகரித்ததும் அவற்றை உள்துறை அமைச்சகம் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளது.
கராச்சி மற்றும் பலுசிஸ்தானில் தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவித்து வருவது குறித்த ஆதாரங்கள் அஜீத் தோவலிடம் ஒப்படைக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலுசிஸ்தானில் இந்தியா தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் ஏற்கனவே அளித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications
