For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்துமீறி தாக்கியதும் இல்லாமல் இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்திவிட்டு இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் ராணும் ஜம்மு காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பெண் பலியானார். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சர்வதேச எல்லையையொட்டி உள்ள சம்பா, கதுவா மாவட்ட கிராம மக்கள் ஊர்களை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை தேடி செல்கிறார்கள்.

Pakistan Issues Warning, Says will Communicate in 'Language India Understands'

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள். மேலும் 13 வயது சிறுமி ஒருவர் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறுகையில்,

கடந்த 6 முதல் 7 மாதங்களாக இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால் நாம் சொல்வது அவர்களுக்கு புரியவில்லை. அதனால் இனி அவர்களுக்கு புரியும் மொழியில் கூற உள்ளோம் என்றார்.

English summary
After violating ceasefire, Pakistan issued warning to India saying that,' it will communicate in language India understands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X