"டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு நாங்கள்தான் காரணம்!" உளறி கொட்டிய பாகிஸ்தான் தலைவர்! திட்டம் அம்பலம்
இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தை பாகிஸ்தான் பின்னால் இருந்து ஊக்குவித்து வருகிறது. இதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அதன் தலைவர்களே சில முறை இது தொடர்பாக உளறிக் கொட்டி விடுகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அதில் டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு நாங்கள் தான் காரணம் என்பதை அந்த பாகிஸ்தான் தலைவர் ஒப்புக்கொள்கிறார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக நீண்ட காலமாகவே இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. இதை பாகிஸ்தான் மறுத்தாலும் கூட புவிசார் அரசியல் வல்லுநர்கள், பாகிஸ்தான் அரசுக்கும் தீவிரவாத இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறார்கள். இதற்கிடையே பாகிஸ்தான் தலைவர் ஒருவரே தங்கள் நாடு தீவிரவாதத்தை ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் தலைவர்
தங்கள் நாடே இந்தியாவை செங்கோட்டையிலிருந்து காஷ்மீர் காடுகள் வரை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் தலைவர் சௌத்ரி அன்வாருல் ஹக் தெரிவித்துள்ளார். அவர் செங்கோட்டை என டெல்லியில் கடந்த நவம்பர் 10ம் தேதி நடந்த கார் கார் குண்டுவெடிப்பைத் தான் சொல்கிறார். இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் உன் நபி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்புடன் தொடர்புடையவர் எனச் சொல்லப்படுகிறது.
அதேபோல ஹக் "காஷ்மீர் காடுகள்" என்றும் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தான் அவர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவரது பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நாங்கள் தான் காரணம்
அதில் ஹக் மேலும் கூறுகையில், "பலுசிஸ்தானை ரத்தம் சிந்த வைத்தால்.. நாங்கள் செங்கோட்டையிலிருந்து காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவைத் தாக்குவோம் என்று நான் முன்பு கூறினேன். கடவுள் அருளால் அதைச் செய்துவிட்டோம். அவர்கள் இன்னும் உடல்களை எண்ண முடியாமல் திணறுகிறார்கள்" என்று அவர் திமிராகப் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தானில் சில காலமாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்குள்ள பலூச் போராளிகள் தங்களுக்குத் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். இருப்பினும், அதை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், தனது பொருளாதாரக் குழப்பங்களை மறைக்கவும், கவனத்தைத் திசை திருப்பவும் பலுசிஸ்தானில் ஏற்படும் கலவரங்களுக்கு இந்தியா தான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா தொடர்ந்து மறுத்தே வருகிறது.
அத்துமீறும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் உள்நாட்டுப் பிரச்சினைகளில் திணறினாலும் கூட தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறியே தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்தியா மிகத் தெளிவாகப் பொதுமக்கள் வீடுகள் மற்றும் ராணுவ சொத்துகளைத் தவிர்த்துவிட்டு.. தீவிரவாத முகாம்களையே தாக்கி அழித்தது. ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியிருந்தது. அதையும் கூட இந்தியா முறியடித்தது தனிக்கதை!
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் மூலம் இனி சிந்து நதிகளை இந்தியா தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். இந்தியா முழுமையாக சிந்து நீரைத் தனது தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது பாகிஸ்தானின் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
-
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications