அடுத்த 36 மணி நேரத்தில் எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம்! பாக். அமைச்சர் அலறல்
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
நேற்றிரவு இஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாக். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அத்தாஉல்லா தரார், மேற்குறிப்பிட்டவாறு கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் அமைச்சரின் அச்சம்
பேட்டியின்போது அவர் பேசியதாவது, "பாகிஸ்தான் மீது அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் ராணுவ தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த உளவுத்தகவல்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. உறுதியான ஆதாரங்கள் இல்லாத, வெறுமென கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டு இந்த தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. இந்தியா ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களை செய்கிறது. ஒன்று அதுவே விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையில் எங்கள் நாட்டை குற்றவாளிகளாக காட்டுகிறது.
இந்தியா மீது குற்றச்சாட்டு
இரண்டாவது, இந்த தீர்ப்பின் அடிப்படையில் தண்டனையை இந்தியாவே அறிவிக்கிறது. அதேபோல மூன்றாவதாக, அறிவிக்கப்பட்ட தண்டனையை இந்தியாவே அமல்படுத்துகிறது. நாங்கள் நியாயமான விசாரணைக்கு, நடுநிலையாளர்களை கொண்ட நிபுணர்களை விசாரணைக்கு நியமிக்க தயார் என்றும், அப்படியான விசாரணை குழுவை இந்தியா உருவாக்கினாலும் அதற்கு ஒத்துழைக்க தயார் என்றும் கூறியிருந்தோம். அப்படி ஏதும் நடக்கவில்லை. நாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
எச்சரிக்கையும் பதிலடியும்
எங்கள் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம். எங்கள் மீது எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும், அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு முழு பொறுப்பும் இந்தியாதான் ஏற்க வேண்டும். இதனை உலக நாடுகள் உணர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
இந்த எச்சரிக்கை வெளியான அடுத்த சில மணி நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. எந்த இடத்தில், என்ன நேரத்தில், எப்படியான தாக்குதலை நடந்த வேண்டும் என்பது உங்கள் விருப்பம். பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டுபிடித்து, துரத்தி அழிப்பது நமது கடமையாகும்" என்று கூறியிருக்கிறார்.
என்ன நடந்தது?
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடந்த இடம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியாகும். இங்கு பேமஸான துலியான் ஏரி இருக்கிறது. இந்த ஏரியை பார்க்க பஹல்காம் வந்து, அங்கிருந்து பைசாரன் வழியாகதான் வர வேண்டும். ஆனால் பஹல்காம் டூ பைசாரன் பள்ளத்தாக்குக்கு வர வாகன போக்குவரத்து வசதி கிடையாது. குதிரை மூலமாகதான் வர வேண்டும். இதனை உணர்ந்துக்கொண்டுதான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் அச்சம்
தாக்குதல் நடத்தினால் உதவிக்கு ஆட்கள் வர நேரமாகும் என்பது இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இது மிக துல்லியமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 1990க்கு பிறகு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது இதுதான் முதல்முறை. இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பதிலடி நடவடிக்கை
இந்த கொடூர தாக்குதலை நடத்தியது தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் என்கிற பயங்கரவாத அமைப்பு என்பது தெரிய வந்திருக்கிறது. இது லக்ஷர் இ தொய்பா எனும் அமைப்பின் கிளை அமைப்பாகும். இந்த அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் உதவி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியாக இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது சில அதிரடி நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக சிந்த நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இவை பாகிஸ்தானை உசுற்பேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications